MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெற்றியை நெருங்கும் தவெக... விஜய் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த திரிஷா

வெற்றியை நெருங்கும் தவெக... விஜய் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த திரிஷா

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்துக்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார். அவர் எதற்காக அங்கு சென்றுள்ளார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 04 2026, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha arrives Vijay residence
Image Credit : X

Trisha arrives Vijay residence

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லேட்டஸ்ட் நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், சென்னை தலைமை அலுவலகம் முன்பு குவிந்த தவெக தொண்டர்கள், உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சி கொடிகளை அசைத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

24
விஜய் இல்லத்தில் திரிஷா
Image Credit : Asianet News

விஜய் இல்லத்தில் திரிஷா

தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தகவல்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தவெக தற்போது 111 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தவெக தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் கடல் போல திரண்டு, கோஷங்கள் எழுப்பியும், நடனமாடியும் கொண்டாடும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. தற்போது 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி வாக்கு எண்ணிக்கை ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார். அவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க அங்கு சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்து முடித்த கையோடு விஜய் வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார் திரிஷா. இன்று அவரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

#Trisha reaches #Vijay's residence pic.twitter.com/omYkCkwlqW

— Poornima Murali (@nimumurali) May 4, 2026

Related Articles

Related image1
Now Playing
ஏழுமலையானை மனமுருகி பிரார்த்தனை செய்த திரிஷா.! தேர்தல் வெற்றி உறுதி என கோஷமிட்ட ரசிகர்
Related image2
ரிசல்ட் நம்ம பக்கம் என கத்திய ரசிகர்... திருப்பதியில் திரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்
34
தவெக முன்னிலை
Image Credit : X

தவெக முன்னிலை

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 6,499 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலவரப்படி, தவெக 111 இடங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 63 தொகுதிகளிலும், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 60 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

44
விறுவிறுக்கும் வாக்கு எண்ணிக்கை
Image Credit : Asianet News

விறுவிறுக்கும் வாக்கு எண்ணிக்கை

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) 4 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) 5 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி (BJP) 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சில மணி நேரம் ஆகும். இந்தத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள தவெக தொண்டர்கள், விஜய்யின் 'விசில் போடு' பாடலை ஒலிக்கவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரிசல்ட் நம்ம பக்கம் என கத்திய ரசிகர்... திருப்பதியில் திரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்
Recommended image2
அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்! எந்த படத்தில் தெரியுமா?
Recommended image3
பிளான் போட்டு அசிங்கப்படுத்தியதா 'கருப்பு' படக்குழு? தக் லைஃப் பதிலடி கொடுத்த த்ரிஷா!
Related Stories
Recommended image1
Now Playing
ஏழுமலையானை மனமுருகி பிரார்த்தனை செய்த திரிஷா.! தேர்தல் வெற்றி உறுதி என கோஷமிட்ட ரசிகர்
Recommended image2
ரிசல்ட் நம்ம பக்கம் என கத்திய ரசிகர்... திருப்பதியில் திரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved