MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரிசல்ட் நம்ம பக்கம் என கத்திய ரசிகர்... திருப்பதியில் திரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்

ரிசல்ட் நம்ம பக்கம் என கத்திய ரசிகர்... திருப்பதியில் திரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 04 2026, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha Visit Tirupati
Image Credit : X

Trisha Visit Tirupati

நடிகை திரிஷா தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதே சமயம், தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அவரது இந்த பயணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காலை முதலே வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது. சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிட்டதுடன், அவரது கட்சி சார்பிலும் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

24
திரிஷாவின் ரியாக்‌ஷன்
Image Credit : x

திரிஷாவின் ரியாக்‌ஷன்

இந்த பரபரப்பான சூழ்நிலையில், திரிஷா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஸ்டோரி மூலம் திருப்பதி பயணம் குறித்து முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார். காரில் பயணிக்கும் காட்சியுடன் ‘திருப்பதி’ என்ற பலகை இடம்பெற்றிருந்தது ரசிகர்களிடம் ஆர்வத்தை கிளப்பியது. திருப்பதி கோயிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்ட பிறகு வெளியே வந்த திரிஷாவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஒருவரால் “ரிசல்ட் நம்ம பக்கம் தான்” என்று கூறப்பட்டதற்கு, எந்த பதிலும் அளிக்காமல் சிரித்தபடியே அவர் சென்றது கவனிக்கத்தக்கதாக இருந்தது.

Related Articles

Related image1
கல்யாணமாகி 4 பிள்ளைங்க இருக்கு... வேற என்ன? திரிஷா போட்ட நெத்தியடி பதிவு
Related image2
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
34
திரிஷா பிறந்தநாள்
Image Credit : instagram

திரிஷா பிறந்தநாள்

சேஷாசலம் மலைத்தொடரின் ஏழாவது சிகரத்தில் அமைந்துள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோவில், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் இந்து ஆலயங்களில் ஒன்றாகும். பாலாஜி என்றும் அழைக்கப்படும் வெங்கடேஸ்வரருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த பல நூற்றாண்டுகள் பழமையான கோவிலுக்கு, ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் திரிஷாவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை திரிஷா பிறந்தநாளுக்ககாக திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தாலும், நெட்டிசன்கள் அதனை அவர் விஜய் வெற்றிபெற வேண்டி பிரார்த்தனை செய்வதற்காக சென்றிருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றன. நடிகை திரிஷா கைவசம் தற்போது கருப்பு திரைப்படம் உள்ளது. அப்படம் வருகிற மே 14ந் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. அப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார்.

44
சர்ச்சைகள்
Image Credit : instagram /@trishakrishnan

சர்ச்சைகள்

நடிகை திரிஷா அடுத்ததாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை. இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதையெல்லாம் வதந்தி என சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் திரிஷா அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. அதையும் திட்டவட்டமாக மறுத்த திரிஷா, தான் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்த உள்ளதாக கூறி இருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்! எந்த படத்தில் தெரியுமா?
Recommended image2
பிளான் போட்டு அசிங்கப்படுத்தியதா 'கருப்பு' படக்குழு? தக் லைஃப் பதிலடி கொடுத்த த்ரிஷா!
Recommended image3
வசூல் வேட்டையில் பாகுபலியை வீழ்த்திய துரந்தர் 2.. எவ்வளவு வசூல் தெரியுமா?
Related Stories
Recommended image1
கல்யாணமாகி 4 பிள்ளைங்க இருக்கு... வேற என்ன? திரிஷா போட்ட நெத்தியடி பதிவு
Recommended image2
ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved