MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தப்பு கணக்கு போட்ட விஜய்.... தட்டிதூக்கும் அதிமுக - தவிடுபொடியான திமுக... தலைகீழாய் மாறிய எலெக்‌ஷன் ரிசல்ட்!

தப்பு கணக்கு போட்ட விஜய்.... தட்டிதூக்கும் அதிமுக - தவிடுபொடியான திமுக... தலைகீழாய் மாறிய எலெக்‌ஷன் ரிசல்ட்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் விஜய் போட்ட தப்பு கணக்கு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 04 2026, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK vs ADMK
Image Credit : X

TVK vs ADMK

தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தேர்தல் ஆணையத்தின் ஆரம்பகட்ட நிலவரங்கள் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் 98 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 61 இடங்களில் முன்னிலையுடன் நெருக்கமாக இரண்டாவது இடத்திலும், ஆளும் திமுக கூட்டணி வெறும் 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

24
மேஜிக் நம்பரை நெருங்கும் விஜய்
Image Credit : PTI

மேஜிக் நம்பரை நெருங்கும் விஜய்

இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் 2,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மாதவரம் தொகுதியில் தவெக வேட்பாளர் எம்.எல்.விஜயபிரபு, 8,406 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தற்போது வரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 118 என்கிற மேஜிக் நம்பரை எட்டினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். அந்த நம்பரை எட்ட தவெக-விற்கு 13 சீட்டுகள் தேவைப்படுகிறது.

Related Articles

Related image1
Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!
Related image2
3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... கில்லி போல் சொல்லி அடிக்கும் தவெக - 10 மணி நிலவரம் இதோ
34
விஜய்யின் தப்பு கணக்கு
Image Credit : Asianet News

விஜய்யின் தப்பு கணக்கு

விஜய் இந்த தேர்தலில் அதிமுகவை ஒரு பொருட்டாக கருதாமல் இருந்தார். அவர் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் விஜய் போட்டது தப்பு கணக்கு என்று அதிமுக நிரூபித்து வருகிறது. திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக 2ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் ஆரம்பகட்ட பின்னடைவைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சோகமான சூழல் நிலவுகிறது. அங்கு போடப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டு, நாற்காலிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த முறை 133 இடங்களில் வென்ற திமுகவுக்கு இது பெரும் சரிவாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், இன்னும் பல சுற்று வாக்கு எண்ணிக்கை இருப்பதால், பிற்பகலில் நிலைமை மாற வாய்ப்புள்ளது.

44
105 இடங்களில் தவெக முன்னிலை
Image Credit : X

105 இடங்களில் தவெக முன்னிலை

தமிழ்நாட்டில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. சில செய்தி தொலைக்காட்சிகள் வெளியிடும் தகவல்களின்படி, விஜய்யின் தவெக 105 இடங்களிலும், அதிமுக கூட்டணி 78 இடங்களிலும், திமுக கூட்டணி 50 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, மேற்கு வங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள் கடைசியாக தான் அறிவிக்கப்பட இருக்கின்றன. தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போதைய நிலவரப்படி இரண்டு தொகுதிகளிலும் விஜய் முன்னிலை வகிக்கிறார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆட்சியை இழக்கிறது திமுக.?! ஸ்டாலினுக்கு தோல்வியை கொடுத்த திங்கள் கிழமை.! என்ன காரணம்?
Recommended image2
Now Playing
ஏழுமலையானை மனமுருகி பிரார்த்தனை செய்த திரிஷா.! தேர்தல் வெற்றி உறுதி என கோஷமிட்ட ரசிகர்
Recommended image3
பாஜகவை கழட்டிவிட்டு.. விஜயுடன் கூட்டணி சேரும் எடப்பாடி பழனிச்சாமி.. திடீர் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!
Recommended image2
3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... கில்லி போல் சொல்லி அடிக்கும் தவெக - 10 மணி நிலவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved