நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

11:36 PM (IST) Oct 29
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
11:12 PM (IST) Oct 29
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நடிகர் கருணாஸ் திடீர் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:11 PM (IST) Oct 29
சனாதன தர்மம் தான் இந்த நாட்டினுடை இலக்கியம் என்கிறார். திருக்குறள் பற்றி சொல்கிறார். சனாதனவாதியா மாறி, இந்துத்துவா பிரச்சார காரராக மாறிவிட்டார் என்று ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
09:45 PM (IST) Oct 29
புதுச்சேரி அரியாங்குப்பம் ஆற்றில் நண்பர்களுடன் குளித்து பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
09:42 PM (IST) Oct 29
நாளை (அக்டோபர் 30, 2022) டாடா-ஏர்பஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சி295 ராணுவப் போக்குவரத்து விமானங்களைத் தயாரிக்கும் வசதிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், ராணுவப் போக்குவரத்து விமானங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளில் இந்தியாவும் நுழையும்.
08:25 PM (IST) Oct 29
மகள் போட்ட டீயை குடித்த 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
07:33 PM (IST) Oct 29
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் இரவு 7 மணியளவில் திடீரென விண்ணில் தோன்றிய வால் நட்சத்திரம் போன்ற ஒளியை பலரும் கண்டு வியந்தனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
07:04 PM (IST) Oct 29
பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு காவல்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
06:18 PM (IST) Oct 29
15 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் சென்னையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
05:13 PM (IST) Oct 29
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்லவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
04:48 PM (IST) Oct 29
காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பின்போது கோவையில் பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் வாக்குவாத செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
04:15 PM (IST) Oct 29
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் விவரித்துள்ளார். அதன்படி தான் myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார். விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் படிக்க
03:12 PM (IST) Oct 29
அடுத்தடுத்து ட்விட்டரில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ள எலான் மஸ்க் அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் டுவிட்டரில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர போகிறார் என்பதை தெரிந்துகொள்ள அதன் பயனர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் அதிபராகி உள்ள எலான் மஸ்க்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து அவருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார். மேலும் படிக்க
02:38 PM (IST) Oct 29
அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது உறுதியாகி உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க
01:35 PM (IST) Oct 29
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஒட்டுபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவரது மூத்த மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.
01:35 PM (IST) Oct 29
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
01:32 PM (IST) Oct 29
கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது. கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும். கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார். அக்டோபர் 18ம் தேதியே மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது. 18ம் தேதி தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
12:00 PM (IST) Oct 29
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை என்ற பெயரில் இளைய சமுதாயத்திடம் மறைமுகமாக பொருளாதார சுரண்டலை நடத்தி வருவதை திமுக அரசு தடுத்து நிறுத்திட முன்வருமா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
10:17 AM (IST) Oct 29
பிரின்ஸ் படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து அப்படத்தை தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
08:55 AM (IST) Oct 29
சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
08:53 AM (IST) Oct 29
கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு, தாயின் தோளில்தான் சுமத்தப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
08:50 AM (IST) Oct 29
சென்னை வண்டலூர் பகுதியில் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு விபத்துகளில் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.
07:47 AM (IST) Oct 29
திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது ரவீந்தர் - மகாலட்சுமி இருவரும் ஜோடியாக குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளனர். அது என்னவென்றால், இந்த ஜோடி புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளது. அந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.35 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க
07:43 AM (IST) Oct 29
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:31 AM (IST) Oct 29
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமான என்ஜினில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானி தீ விபத்தை முன்கூட்டியே அறிந்ததை அடுத்து 184 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
07:30 AM (IST) Oct 29
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ளது.