Asianet News TamilAsianet News Tamil

காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பின்போது கோவையில் பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் வாக்குவாதம்.!

காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பின்போது கோவையில் பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் வாக்குவாத செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்த அவர், திருவள்ளுவர் சிலைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தி திணிப்பு என்று சொல்பவர்கள் திராவிட கட்சிகள். திராவிட கட்சிகள் தூய தமிழை பேசுகிறார்களா? அவர்கள் என்ன தமிழை வளர்த்தார்கள்? என்றார். தொடர்ந்து பந்த் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார். 

தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு,  பதில் தெரியாமல் அருகில் இருந்தவர் அது பற்றிய தகவல்களை அளித்தார்.  1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்தி, சமீபத்திய கோவை வெடி விபத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார்.

நான் யாரையும் பயமுறுத்தவில்லை, அச்சமடைய வைக்கவில்லை என்றும் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். இதற்குப் பின் ஆத்திரமடைந்தவர் சத்தமாக பதில் அளித்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த பாஜகவினர் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Video Top Stories