வயிற்று வலிக்கு போன சிறுமி கர்ப்பம்.. டாக்டர்கள் ஷாக் - 4 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்

15 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் சென்னையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

15 year old girl pregnant doctors shocked Chennai police investigation

அதிர்ச்சி சம்பவம்:

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதான மகள் இருக்கிறார். இந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அவரது தாயார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

சிறுமி கர்ப்பம்:

மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறுமியின் தாயார் இதை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தார். அப்போது சிறுமி தான் கர்ப்பமானதற்கு வீட்டின் உரிமையாளர் 40 வயதான வெங்கடேசன் என்பவரே காரணம் என்று தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

15 year old girl pregnant doctors shocked Chennai police investigation

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

போலீசில் புகார்:

போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், உரிமையாளர் என்பதால் சிறுமி, வெங்கடேசன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். இதில் சிறுமி மீது வெங்கடேசனுக்கு மோகம் ஏற்பட்டது. ஒருநாள் வெங்கடேசன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது போல் வெங்கடேசனின் உறவினர் வேங்கையன் (36) என்பவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

போக்சோவில் கைது:

வெங்கடேசனின் மேலும் 2 நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவளது வாழ்க்கையை சீரழித்துள்ளனர். வெங்கடேசன் இதே போல் பலமுறை மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கு வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியானது. போலீசார் 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios