சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இந்த பகுதிகளில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க..!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும்.
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- சாலையில் கேட்பாரற்று இருந்த கார் மற்றும் பைக்குகள்… காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை!!
கும்மிடிப்பூண்டி சிப்காட்
கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்.எஸ்., IV தொழிற்பேட்டை பகுதி, காயலார்மேடு, எளவூர், பெத்திக்குப்பம் கிராமம், சுண்ணாம்புகுளம், ஒப்சமுத்திரம், சீன்னஓபுலபுரம், பெரியஒபுலாபுரம், தலையாரி பாளையம், சின்னநத்தம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.