சாலையில் கேட்பாரற்று இருந்த கார் மற்றும் பைக்குகள்… காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை!!

திருச்சியில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

police seized cars and bikes that were unattended on the road at trichy

திருச்சியில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவையில் கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் திருச்சி மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், சந்தேக நபர்களை கண்காணிக்கவும், முக்கிய அரசு அலுவலங்கள், மத ஸ்தலங்கள், மற்றும் முக்கிய சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு (BDDS) உடன் இணைந்து தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கோவை தொடர்குண்டு வெடிப்பு மீண்டும் தலைதூக்குமோ என்ற அச்சத்தில் மக்கள்; முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிர

police seized cars and bikes that were unattended on the road at trichy

அதன்படி இன்று திருச்சி மாநகரம் முழுவதும் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்களுடைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பீட் (Beat) காவலர்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மூலம் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. இந்த நிலையில் அமர்வுநீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாசன்ஸ்ரோட்டில் ஐயப்பன்கோவில் அருகில் கேட்பாரற்று 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரபாத் ரவுண்டான அருகில் 9 கார்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

police seized cars and bikes that were unattended on the road at trichy

இதை அடுத்து அந்த வாகனங்களை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவுடன் இணைந்து அதிகாரிகள் சோதனை செய்ததோடு வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு இதுபோன்ற தொடர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்டும், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios