10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞருக்கு ரூ.20ஆயிரம் அபராதமா? ஆர்.பி. உதயகுமார் குமுறல்..!

இன்றைக்கு 50 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது வருத்தமான செய்தி. கடந்த ஆண்டில் மட்டும் 11,419 பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

Traffic Violation Fine Amount.. RB Udayakumar Condemnation

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை என்ற பெயரில் இளைய சமுதாயத்திடம் மறைமுகமாக பொருளாதார சுரண்டலை நடத்தி வருவதை திமுக அரசு தடுத்து நிறுத்திட முன்வருமா? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இன்றைக்கு 50 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் சாலை விபத்துக்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது வருத்தமான செய்தி. கடந்த ஆண்டில் மட்டும் 11,419 பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சட்டம் மக்களை பாதுகாக்க தான், சுதந்திரம் எல்லை மீறும் போது பாதுகாப்பான சட்டத்தை தர வேண்டும். ஆனால், மக்களுக்கான பாதுகாப்பு சட்டம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் தற்போது உள்ளது.

இதையும் படிங்க;- சென்னை மக்களே உஷார்.. இன்று முதல் புதிய அபராதம் தொகை அமலுக்கு வந்தது..!

Traffic Violation Fine Amount.. RB Udayakumar Condemnation

கடந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் வேதனை குரல் இளைஞர்கள் எழுப்பப்பட்டு வருகிறனர். அப்படி என்ன இந்த அரசு இளைஞர்களை கசக்கிபுழிகிறது என்று பார்த்தால், தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறிய திமுக அரசு. அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடமைக்காக பெட்ரோல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா காலத்தில் மக்கள் வேதனையில் இருந்து பல்வேறு கடன் சுமையை ஏற்றினர். தற்போது திமுக அரசு பொறுப்பேற்று சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என்ற மிகப்பெரிய பொருளாதார சுமையை சுமந்து கொண்டிருக்கிற வேளையில், வாகன விபத்துகளை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய பொருளாதார சுரண்டலை  மக்களிடத்திலே, இளைஞர்யிடத்திலே கவலை தமிழக முழுவதும் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலை விண்ணை மட்டும் அளவில் உள்ளது. இன்றைக்கு பத்தாயிரம், 20 ஆயிரம் என்று சாமானிய இளைஞர்கள் மாத சம்பளம் வாங்குகிறார்கள். இன்றைக்கு கொடுமை என்ன லிப்ட் கேட்டவர் ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்தினால் வாகன ஓட்டுனருக்கு அபதாரம் விதிக்கப்படுகிறது. லைசென்ஸ் இல்லையென்றால் 5000, எல்எல்ஆர் இருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதெல்லாம் இன்றைக்கு ஊடகங்களில் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.  பத்தாயிரம் சம்பளம் வாங்கும் இளைஞருக்கு 22,000 அபராதம் விதித்தால் நான் எங்கே கொண்டு போய் அபராதம் செலுத்த முடியும். அரசு மிகப்பெரிய கட்டமைப்பு வைத்துள்ளது. போக்குவரத்து விதிகளை செயல்படுத்துவதில் எந்த மாற்று கருத்து இல்லை. புதிய சட்டம் உருவாக்குவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அரசு செய்ய வேண்டிய பணிகளை தவறவிட்டது.

Traffic Violation Fine Amount.. RB Udayakumar Condemnation

கட்டமைப்புகளை உருவாக்கி, மேம்படுத்தி, அதேபோல் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து, வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்து அந்த இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க வேண்டிய அரசு இன்றைக்கு இருள் சூழ்ந்த நடவடிக்கை எடுத்ததால் வேதனையில் இருக்கிறது ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயம். தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டரை கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளது. இந்த இரண்டரை கோடி இருசக்கர வாகனத்திற்கும் இந்த அரசு அபராதம் விதிக்குமோ? இது மறைமுக பொருளாதார சுரண்டல் இல்லையா? இது மக்களை அச்சுறுத்தும் வேலையோ இது?

இளைஞர்களை முடக்கும் வேலையா? அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அது பகல் கொள்ளையாக இருக்க கூடாது.  இளைய சமுதாயத்தில் நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டிய அரசு, இன்றைக்கு வாகன விதிமீறல் என்று சொல்லி அபாண்டமாக ஒரு பொருளாதார சுரண்டலை இந்த இளைய சமுதாயத்தின் மீது ஏவி விட்டு இருக்கிற மிகப்பெரிய தாக்குதல்ஆகும்.

Traffic Violation Fine Amount.. RB Udayakumar Condemnation

ஆகவே இந்த அரசு கணிவுடன் பரிசீலிக்க வேண்டும், அரசின் நடவடிக்கையில் மனித நேயம் இருக்க வேண்டும், நோக்கம் சரியானதாக இருக்க வேண்டும். மக்களை பாதுகாக்கின்ற வழியாக இருக்க வேண்டுமே தவிர, புதை குழியில் தள்ளுவதாக அமைந்து விடக்கூடாது. ஏற்கனவே பொருளாதார சவால்களை எதிர்கொள்ளாமல் எத்தனை தற்கொலைகள் அவல நிலையில் செய்திகளை பார்த்து நாம் வேதனை அடைகிறோம், கவலை அடைகிறோம். அரசு கட்டமைப்புகளை மேம்படுத்திடவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கட்டும், ஆனால் அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அபாயகரமாக கட்டணம் இருக்கக் கூடாது என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  சினிமாவையே மிஞ்சிய தரமான சம்பவம்.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய நிறைமாத கர்ப்பிணி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios