சென்னை மக்களே உஷார்.. இன்று முதல் புதிய அபராதம் தொகை அமலுக்கு வந்தது..!

சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் வகையில், அபராதத்தை அதிகரிக்கலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்  சில அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு புதிய அபராதம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Additional penalty for violating traffic rules will come into effect from today

புதிய சாலை போக்குவரத்து விதிகளின் அடிப்படையில் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் வகையில், அபராதத்தை அதிகரிக்கலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்  சில அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு புதிய அபராதம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க;- சாலைகளில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. குடித்துவிட்டு ஓட்டினாலும் ஆப்பு தான்..!

Additional penalty for violating traffic rules will come into effect from today

இதில் முக்கிய அம்சமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் பயணிக்கக் கூடிய அந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு ஏற்படுத்தினால் ரூ.10,000 அபதாரம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Additional penalty for violating traffic rules will come into effect from today

அதேபோல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 5000 ரூபாய் இருந்த அபராத தொகை 10,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி ஓலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ.1,000 அபதாரம் விதிக்கப்படும். வரம்பு மீறி சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட பலவற்றுக்கும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபராதம் உயர்வு  சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Additional penalty for violating traffic rules will come into effect from today

இந்நிலையில் விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகையினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, அதன் சர்வெரில் அப்டேட் செய்துவிட்டது. எனவே இன்று முதல் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை வசூலிக்கப்படும். மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. புளிய மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியும், தாயும் பலி.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios