நெஞ்சை உலுக்கும் கோர விபத்து.. புளிய மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியும், தாயும் பலி.!

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே நெஞ்சத்தூரை சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா(21). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சில் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டார்.

Ambulance accident.. Pregnant woman and mother killed in Sivaganga

சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே நெஞ்சத்தூரை சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா(21). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சில் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டார். அவருடன் அவரது தாய் விஜயலட்சுமி, மற்றும் உறவுப் பெண் திருச்செல்வி ஆகியோர்கள் சென்றனர்.

இதையும் படிங்க;- கெத்து காட்ட நினைத்து பொத்துன்னு விழுந்த இளைஞரை கொத்தாக தூக்கிய போலீஸ்.. சாட்டையை சுழற்றிய நீதிபதி..!

Ambulance accident.. Pregnant woman and mother killed in Sivaganga

அப்போது, வேகமாக சென்றுக்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன்(27), தொழில்நுட்ப அலுவலர் சத்யா(30) மற்றும் உறவுப்பெண் திருச்செல்வி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

Ambulance accident.. Pregnant woman and mother killed in Sivaganga

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், உயிரிழந்த கர்ப்பிணி மற்றும் அவரது தாயரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  சாலைகளில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. குடித்துவிட்டு ஓட்டினாலும் ஆப்பு தான்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios