உயர் அதிகாரிகள், சிவகங்கை மாவட்டத்தை நோக்கி பார்வையை திருப்புவது நல்லது. தேர்தல் ஆதாயத்திற்கு கலப்பட பிளீச்சிங் பவுடர் விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகராட்சியில் பிளிச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு பவுடரை குப்பை தொட்டிகளுக்கு அருகில் கொட்டிய அவலம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னணியில் பல கோடி ஊழல் அம்பலமானது. அதேபோல, சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் அமைச்சர் பெரியகருப்பண் பெயரை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆதவன் என்ற கம்பெணி சமீபத்தில் சுண்ணாம்பு கலந்த பிளிச்சிங் பவுடர் மூட்டைகளை சிவகங்கை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்தது. கலப்படம் பற்றி லீலைககள் கசிந்த பிறகு சில இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகளை திரும்ப பெற்றனர்.
மீண்டும், அதே ஆதவன் என்ற கம்பெணிக்கு ஆர்டர் கொடுக்கச் சொல்லி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு உதவி இயக்குநர்களும், பிடிஓக்களுக்கு உத்தரவிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சிவகங்கை மாவட்டதை சேர்ந்த பத்து ரூபாய் இயக்கத்தை சார்ந்தவர்கள் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், “ஆதவன் கம்பெணியினர் அரசு தரப்பில் குறிப்பிட்ட அளவு கெமிக்கல் இல்லாத, வெறும் சுண்ணாம்பு பவுடரை சப்ளை செய்துள்ளனர். அதே கம்பெணிக்கு மீண்டும் ஆர்டர் கொடுத்துள்ள இரண்டு உதவி இயக்குநர்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். அதனால், கிடைக்கும் வரை சுருட்டி வருகின்றனர்.

ஆதவன் கம்பெணிக்காரர்கள் அதிகாரிகளை சந்திக்கும் போதே பணத்தால் மட்டுமே பேசுவார்களாம். யாருக்கு வேண்டுமென்றாலும் ஆர்டர் கொடுக்கட்டும். ஆனால், கலப்படம் இல்லாத பிளீச்சிங் பவுடரை சப்ளை செய்யவேண்டும். அதனை, சம்மந்தப்பட்டவர்கள் கண்காணிக்க வேண்டும். எங்கள் பத்து ரூபாய் இயகத்தின் சார்பாகவும், அந்தந்த ஊராட்சிகளில் உள்ள இளைஞர்களின் மூலமாகவும் கண்காணிப்போம். பிளீச்சிங் பவுடர் தரத்தை மக்களுக்கு தெரிவிப்போம்’’ என்றார்.
உயர் அதிகாரிகள், சிவகங்கை மாவட்டத்தை நோக்கி பார்வையை திருப்புவது நல்லது. தேர்தல் ஆதாயத்திற்கு கலப்பட பிளீச்சிங் பவுடர் விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி பெரியகருப்பணை அமாலக்கத்துறையில் மாட்டி வைக்கும் வேலையை இளங்கோவன் என்ற உதவியாளர் கச்சிதமாக செய்து வருவதாகவும் குமுறுகிறார்கள் சிவகங்கை மாவட்ட சமூக ஆர்வலர்கள்.

