Asianet Tamil News highlights: நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவு செய்துள்ளனர்.

03:27 PM (IST) May 30
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கடைசி திரைப்படத்தில் புது வரவாக கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
02:58 PM (IST) May 30
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
01:20 PM (IST) May 30
50 லட்சம் மினி கூப்பர் காரை வாங்கியதாக கேரள கம்யூனிஸ்ட் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
12:53 PM (IST) May 30
ஒரு குடும்பத்தினுடைய கஜானாவை நிரப்புவதற்கான நடவடிக்கையோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12:53 PM (IST) May 30
எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி! தோனி ஒரு சகாப்தம்! வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
12:29 PM (IST) May 30
மேட்டுப்பாளையத்தில் பிரபல உணவக வளாகத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகளால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
12:20 PM (IST) May 30
திருமணத்தை நிறுத்திவிட்டு ஓடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12:13 PM (IST) May 30
கேன்ஸ் திரைப்பட விழாவில் சமந்தா நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளதை படக்குழுவினர் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர்.
12:08 PM (IST) May 30
சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 1ஆம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வெய்யலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டது. இதனை அடுத்து வருகிற 7-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
11:51 AM (IST) May 30
கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.
11:48 AM (IST) May 30
சூலூரில் தற்கொலை செய்து கொண்ட நண்பரின் உடல் மீது அமர்ந்து சிவபூஜை நடத்தி இறுதிச்சடங்கு செய்ததை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
11:39 AM (IST) May 30
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்,
11:36 AM (IST) May 30
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
11:10 AM (IST) May 30
ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் 8 பேர் பலி, 30 பேர் காயமடைந்துள்ளனர்.
10:35 AM (IST) May 30
ஓப்போ ரெனோ 10 சீரிஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதனை பற்றிய பல்வேறு சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
09:23 AM (IST) May 30
சென்னை மயிலாப்பூர் பகுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
09:02 AM (IST) May 30
கடந்த ஒரு மாதத்தில் பாகிஸ்தான் சிறையில் மற்றொரு இந்திய மீனவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
08:20 AM (IST) May 30
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உடன் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்தது பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:19 AM (IST) May 30
சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகிறார்.
08:03 AM (IST) May 30
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
07:42 AM (IST) May 30
அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
07:17 AM (IST) May 30
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது எங்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நிலைக்கு எங்களை நீங்களும் தள்ளிவிட வேண்டாம் என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளேன் என்றார்.