Asianet News TamilAsianet News Tamil

ஜம்மு காஷ்மீர்: வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து விபத்து - 8 பேர் பலி; 30 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் 8 பேர் பலி, 30 பேர் காயமடைந்துள்ளனர்.

Jammu and Kashmir: 8 killed, 30 injured as the bus going to Vaishno Devi skids off a bridge
Author
First Published May 30, 2023, 11:04 AM IST

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கத்ராவிலிருந்து 15 கிமீ தொலைவில், ஜஜ்ஜார் கோட்லி பகுதிக்கு அருகில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து பாலத்தில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியது. பயணித்த பேருந்து ஆனது ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு மாவட்ட ஆட்சியரின் கூற்றுப்படி, அமிர்தசரஸில் இருந்து கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒரு குறுகிய பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த பேருந்து  வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

Jammu and Kashmir: 8 killed, 30 injured as the bus going to Vaishno Devi skids off a bridge

சிஆர்பிஎஃப், காவல்துறை மற்றும் பிற குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் அசோக் சவுத்ரி தெரிவித்தார். “ஆம்புலன்ஸ்கள் அழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன," என்று அவர் கூறினார்.

"காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்ற அனைத்து அணிகளும் - துணை ராணுவக் குழுக்கள் மற்றும் SDRF - காவல்துறைக்கு உதவுகின்றன. உள்ளூர் மக்களும் உதவுகிறார்கள், இதனால் மக்களை வெளியேற்றி மீட்க முடியும்" என்று ஜம்மு எஸ்எஸ்பி சந்தன் கோஹ்லி கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

இதையும் படிங்க..பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு எப்போது தெரியுமா? முழு விபரம்

Follow Us:
Download App:
  • android
  • ios