அன்போடு நேரில் அழைத்த ஸ்டாலின்.. ஜூன் 15ல் சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிநி பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

President Draupadi Murmu is coming to Chennai on June 15!

சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க  ஜூன் 15-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகிறார்.

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிநி பிறந்தநாளில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 28ம் தேதி டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தார். 

President Draupadi Murmu is coming to Chennai on June 15!

முதல்வர் ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5ம் தேதி மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்தார். ஆனால், வேறு சில காரணங்களுக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பயணம் திடீரென ரத்தானது. 

President Draupadi Murmu is coming to Chennai on June 15!

இந்நிலையில், பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios