- Home
- Business
- Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை மீண்டும் குறைவு - எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை மீண்டும் குறைவு - எவ்வளவு தெரியுமா?
சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை காணலாம்.

தங்கம் எவ்வளவு விலை அதிகரித்தாலும், தங்கம் வாங்கும் ஆர்வம் மட்டும் மக்களிடையே இன்னும் போகவில்லை. உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, தங்க பயன்பாடு அதிகளவில் இருக்கும் நாடு இந்தியா.
ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே தான் பலரும் தங்கத்தினை வாங்கி குவித்து வருகிறார்கள்.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,760க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,595க்கும் விற்பனையானது.
இன்றைய (மே 30) நிலவரப்படி, தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ77க்கும், ஒரு கிலோ வெள்ளி 77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.