Published : Dec 31, 2022, 07:05 AM ISTUpdated : Jan 01, 2023, 10:18 AM IST

Asianet Tamil News Live: அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு; அகவிலைப்படி 38% உயர்வு

சுருக்கம்

அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 34% அகவிலைப்படியை 38%ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு இன்று முதலே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Asianet Tamil News Live: அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு; அகவிலைப்படி 38% உயர்வு

10:18 AM (IST) Jan 01

புத்தாண்டு கொண்டாட்டம்..! மது போதையில் அதி வேகமாக வாகனம் ஓட்டிய இளைஞர்கள்- அதிரடியாக நடவடிக்கை எடுத்த போலீஸ்

சென்னையில் புத்தாண்டையொட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

10:28 PM (IST) Dec 31

2024 தேர்தலில் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்.. அடித்துச் சொல்லும் முன்னாள் முதல்வர்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார். - முன்னாள் முதல்வர் கமல்நாத்.

மேலும் படிக்க

09:37 PM (IST) Dec 31

AIADMK : திமுக ஆட்சி அமைந்து 18 மாசம் ஆச்சு.. எந்த திட்டமும் மக்களுக்கு செல்லவில்லை - ஆர்.பி உதயகுமார் பேச்சு

திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று  இந்த 18 மாத ஆட்சி கால நிறைவில், எந்த திட்டத்தையும் இந்த மக்களுக்கு தரவில்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

மேலும் படிக்க

08:43 PM (IST) Dec 31

BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் - பாஜக.

மேலும் படிக்க

08:03 PM (IST) Dec 31

Karnataka Election : தனித்து போட்டி! அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்! கர்நாடகா தேர்தலில் பாஜகவின் வியூகம் எடுபடுமா?

கர்நாடகா மாநிலத்தில் 2023 ஏப்ரல் மாதவாக்கில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியும், பாஜக கட்சியும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க

06:46 PM (IST) Dec 31

DMK Vs BJP : கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? பாஜக தயார்.. முதல்வருக்கு சவால் விட்ட அண்ணாமலை

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

மேலும் படிக்க

06:20 PM (IST) Dec 31

Saturday : சனிக்கிழமை பற்றிய யாருக்கும் தெரியாத 20 உண்மைகள்.. உங்களுக்கு தெரியுமா.?

சனிக்கிழமை என்பது வழக்கமான விடுமுறை நாளாகும். சனிக்கிழமைகளைப் பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

04:53 PM (IST) Dec 31

தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

என்எல்சி விவகாரத்தை நாங்கள் விடுவதாக இல்லை. மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினை இது. - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

மேலும் படிக்க

03:26 PM (IST) Dec 31

சிறுவனின் ஆணுறுப்பில் நைலான் கயிறு கட்டிய மாணவர்கள்.. 8 வயது மாணவனுக்கு நேர்ந்த கொடுமை.!!

8 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் நைலான் நூலை மாணவர்கள் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

02:48 PM (IST) Dec 31

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக.. செவிலியர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்த பாஜக!

செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திறனற்ற திமுக என்று கடுமையாக விமர்சித்துள்ளது பாஜக.

மேலும் படிக்க

01:45 PM (IST) Dec 31

தேர்தல் ஆணைய கடிதத்தை திருப்பி அனுப்பிய இபிஎஸ் தரப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.  தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு திருப்பி அனுப்பியுள்ளது.  
 

01:41 PM (IST) Dec 31

கார் மீது பேருந்து நேருக்கு நேர் மோதல்! 9 பேர் ஸ்பாட் அவுட்! இரங்கல் தெரிவித்து நிவாரண அறிவித்த பிரதமர் மோடி.!

குஜராத்தில் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

12:42 PM (IST) Dec 31

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

11:59 AM (IST) Dec 31

குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து ரசித்த இளைஞர்! அலறிய இளம்பெண்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

கோவையில் இளம்பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க

11:59 AM (IST) Dec 31

திமுகவில் 23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்.. யார் யார் தெரியுமா? துரைமுருகன் வெளியிட்ட பட்டியல்..!

திமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர்  துரைமுருகன் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

09:30 AM (IST) Dec 31

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்.. துயரத்திலும் தாயின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்த மகள்கள்..!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த  பெண்ணின்  உடல் உறுப்புகளை தானம் செய்ய  இந்த பெரும் துயரத்திலும் அவரது மகள்கள் முன்வந்துள்ளனர்.  

மேலும் படிக்க

08:44 AM (IST) Dec 31

ஜி.கே.மணியின் மகன் பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ராமதாஸ்.!

பாட்டாளி மக்கள் கட்சியின்  இளைஞரணியின் தலைவரும், ஜி.கே.மணியின் மகனான தமிழ்க்குமரன் அப்பொறுப்பில் திடீரென விலகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

08:06 AM (IST) Dec 31

இடைநிலை ஆசிரியர்களை துச்சமாக நினைக்கும் திமுக அரசு.. இதுதான் உங்க திராவிட மாடலா? எகிறி அடிக்கும் டிடிவி..!

சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது. 

மேலும் படிக்க

07:49 AM (IST) Dec 31

நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து! 4 பேர் உடல்சிதறி பலி! 5 பேர் படுகாயம்.!

நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர், மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

07:28 AM (IST) Dec 31

சகோதரி கனிமொழிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பாரா ஸ்டாலின்? போற போக்கில் கொளுத்தி போட்ட சீமான்.!

தைப்பொங்கலுக்கு மதுவிற்பனைக்கு 400 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்கிறார்கள். பெண்கள் தாலி அறுத்து கொண்டு செல்லும் நிலைதான் தலைநிமிரலா? என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க


More Trending News