BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் - பாஜக.

DMK has the guts and strength contest the 2024 election alone TN BJP

திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் என்று தமிழக பாஜக சவால் விட்டுள்ளது.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. அதிமுகவை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் பாஜக ஒன்று வளரவில்லை.

DMK has the guts and strength contest the 2024 election alone TN BJP

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

ஒன்றிய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர, தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல. தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்தவித இழிவான காரியத்தையும் செய்வார்கள் என்று பாஜகவை வெளுத்து வாங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே 1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை.  தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது.

இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு. பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க ஸ்டாலின், கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா ? என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க..DMK Vs BJP : கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? பாஜக தயார்.. முதல்வருக்கு சவால் விட்ட அண்ணாமலை

இந்நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின், 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல், இதுவரை வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லாத, திராணி இல்லாத, தெம்பில்லாத ஒரு கட்சி திமுக.

2014ல் கூட்டணி வைத்து போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத கட்சி தி மு க. சவால் விடுகிறோம். திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios