தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

என்எல்சி விவகாரத்தை நாங்கள் விடுவதாக இல்லை. மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினை இது. - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

pmk president anbumani ramadoss secrets open up nlc issue

என்எல்சி விவகாரத்தில் திமுக அமைச்சர்களின் தலையீடு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழுவில் கலந்து கொண்டார் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ். அப்போது பேசிய அவர்,என்எல்சி விவகாரத்தை பொறுத்த வரை, ஒரே பகுதியில் முப்போகம் விளையக்கூடிய 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்குவதற்கு என்எல்சி நிறுவனம் துடித்துக் கொண்டிருக்கிறது. நெல், கரும்பு, வாழை, முட்டைக்கோஸ்,  கத்தரிக்காய் உள்ளிட்ட பயிரிடப்படுகின்ற அந்த நிலத்தை பிடுங்கி, அதிலிருந்து நிலக்கரியை விட தரக்குறைவான பழுப்பு நிலக்கரியை எடுப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது என்எல்சி நிர்வாகம்.

pmk president anbumani ramadoss secrets open up nlc issue

அன்புமணி ராமதாஸ்

இந்த நிலையில் ஏற்கனவே 37 ஆயிரம் ஏக்கர் இடம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலையில்லை, வாழ்வாதாரம் இல்லை. 1956 ல் நிலம் கொடுத்தவருக்கு இன்று வரை இவர்கள் கொடுப்பதாக கூறிய நிலத்திற்கு பட்டா வழங்கவில்லை. ஆனால் மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்குவதற்கு என்எல்சி நிர்வாகம் துடித்துக் கொண்டிருக்கிறது.  கோவை அன்னூர் பகுதியில் ஒரு தொழில் பேட்டை தொடங்க வேண்டும் என ஏதோ ஒரு அளவுக்கு விவசாயம் செய்யக்கூடிய பகுதியில் 1600 ஏக்கர் நிலத்தை எடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தபோது, கடுமையாக எதிர்த்தார்கள்.

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

அதிமுக, பாஜக

அங்கு இருக்கின்ற மக்களும், பாஜகவும் போராடியது. அதிமுக போய் போராடியது. எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி நேரடியாக சென்று, 1600 ஏக்கர் நிலத்தை எடுக்கக் கூடாது என்று போராடினார்கள். உடனடியாக அரசு அதை நாங்கள் எடுக்கவில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் இங்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை என்எல்சி காரன் பிடுங்க நின்று கொண்டிருக்கிறான். 

என்எல்சி விவகாரம்

ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி போராடும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் இதனை கேட்பதற்கு நம்ம பாட்டாளி மக்கள் கட்சியை தவிர வேறு யாரும் இல்லை. தமிழகத்தில் விவசாய சங்கங்கள் இல்லையா? மற்ற கட்சிகளுக்கு இந்த விவசாய நிலம் கண்ணில் தெரியவில்லையா? ஏன் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பவில்லை? என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க..கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக.. செவிலியர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்த பாஜக!

pmk president anbumani ramadoss secrets open up nlc issue

திமுக ஆட்சி

தொடர்ந்து பேசிய அவர், என்எல்சி நிர்வாகம் தனியார் மையமாக போகிறது. எந்த நிறுவனத்துக்கு கொடுக்கப் போகிறார்கள் தெரியுமா? இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான ஏ என்ற வார்த்தையில் ஆரம்பிக்கக் கூடிய அந்த நிறுவனத்திற்கு கொடுக்கத்தான் இவர்கள் இவ்வளவு அவசரமாக நிலத்தை பிடுங்குவதற்கு களம் இறங்கி உள்ளார்கள். அவர்களின் நோக்கமும் அதுதான். ஆனால் தமிழக அரசாங்கமும் இதற்கு ஏன் துடித்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

2 திமுக அமைச்சர்கள்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு திமுக அமைச்சர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே அமைச்சர்கள் தான் நிலத்தை எடுக்கக் கூடாது என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது போராடினார்கள். இப்போது ஆட்சி வந்தார்கள் மாறிவிட்டது. நெய்வேலி பகுதியில் வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ளேன். மக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தி, ஒரு பிடி மண்ணைக் கூட எடுப்பதற்கு நான் விடமாட்டேன். எங்களின் கோரிக்கை என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும். 

பத்து அடியில் இருந்த நீர், ஆயிரம் அடியில் சென்று விட்டது. வாழ்வாதாரம் கிடையாது, சுற்றுச்சூழல் போய்விட்டது, விவசாயம் அழிந்துவிட்டது, வேலை வாய்ப்பு கிடையாது, தமிழர்களுக்கும் வேலை வாய்ப்பு இல்லை, இப்போது நிலத்தை பிடுங்க அதிகாரிகள் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார் அன்புமணி ராமதாஸ்.

இதையும் படிங்க..சிறுவனின் ஆணுறுப்பில் நைலான் கயிறு கட்டிய மாணவர்கள்.. 8 வயது மாணவனுக்கு நேர்ந்த கொடுமை.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios