சிறுவனின் ஆணுறுப்பில் நைலான் கயிறு கட்டிய மாணவர்கள்.. 8 வயது மாணவனுக்கு நேர்ந்த கொடுமை.!!

8 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் நைலான் நூலை மாணவர்கள் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Students tied a nylon rope around the boy private parts

டில்லி, கித்வாய் நகர் பகுதியில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் (என்டிஎம்சி) பள்ளியில் 8 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் நைலான் நூலை மாணவர்கள் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாகவும், சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தொடர்ந்து பேசிய டெல்லி போலீஸ் வட்டாரங்கள்,  கித்வாய் நகரில் உள்ள அடல் அத்ராஷ் பள்ளியில் படித்த 8 வயது மாணவனுக்கு,  சக மாணவர்கள் சிறுவன் அந்தரங்க உறுப்பில் நைலான் நூலைக் கட்டியுள்ளனர்.

Students tied a nylon rope around the boy private parts

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி குளிக்கச் சென்ற மாணவனை, பெற்றோர் சோதனையிட்டபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சிறுவன் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாணவர்களின் குழுவை சிறுவனால் அடையாளம் காண முடியவில்லை என்றும், எனவே மாணவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகிறார்கள் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக.. செவிலியர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்த பாஜக!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios