கடந்த டிசம்பர் 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

திமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொன்முடி, கனிமொழி, ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, திமுகவில் நிர்வாக ரீதியில் உள்ள 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் விதமாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து அணிகளை கண்காணிப்பதற்கான பொறுப்பாளர்களாக துணைப் பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொறுப்பாளர்கள் விவரம்;- 

1. துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி

* விவசாய அணி

* விவசாயத்தொழிலாளர் அணி

* மருத்துவரணி

* விளையாட்டு மேம்பாட்டு அணி 

* தகவல் தொழில்நுட்ப அணி

* தகவல் தொழில்நுட்ப அணி

2. துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி

* பொறியாளர் அணி

* வர்த்தகர் அணி

* நெசவாளர் அணி

* அயலக அணி

3. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா

* மாணவரணி

* இளைஞரணி 

* தொழிலாளர் அணி

* அமைப்புசாரா ஓட்டுநர் அணி

* சட்டத்துறை

4. துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ்

* தொண்டரணி

* மீனவரணி

* ஆதி திராவிடர் நல உரிமைப் பிரிவு 

* சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு

5. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி

* சுற்றுச்சூழல் அணி 

* இலக்கிய அணி

* கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை

* மகளிர் அணி

* மகளிர் தொண்டரணி