Asianet News TamilAsianet News Tamil

கார் மீது பேருந்து நேருக்கு நேர் மோதல்! 9 பேர் ஸ்பாட் அவுட்! இரங்கல் தெரிவித்து நிவாரண அறிவித்த பிரதமர் மோடி.!

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.  25 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

Gujarat road accident... PM Modi announces 2 lakh compensation for the deceased families
Author
First Published Dec 31, 2022, 1:39 PM IST

குஜராத்தில் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.  25 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- பாகிஸ்தானில் பெண் கொடூர கொலை.. இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - பரபரப்பு சம்பவம்

Gujarat road accident... PM Modi announces 2 lakh compensation for the deceased families

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Gujarat road accident... PM Modi announces 2 lakh compensation for the deceased families

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- நவ்சாரியில் சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.   பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000  வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- லீவில் இருக்கும் ஊழியரை தொந்தரவு செய்யக்கூடாது.. மீறினால் 1 லட்சம் அபராதம் - ட்ரீம் 11 நிறுவனம் அதிரடி

Follow Us:
Download App:
  • android
  • ios