புத்தாண்டு கொண்டாட்டம்..! மது போதையில் அதி வேகமாக வாகனம் ஓட்டிய இளைஞர்கள்- அதிரடியாக நடவடிக்கை எடுத்த போலீஸ்

சென்னையில் புத்தாண்டையொட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Police registered a case against those who drove under the influence of alcohol in Chennai on New Year

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்தை ஒருவருக்கொருவர் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.  சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை சந்திப்பில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கேக் வெட்டி ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கடற்கரை பகுதிக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டையொட்டி  தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் கோயில்களில் சிறப்பு  வழிபாடுகளும் நடைபெற்றது.

காவல் அதிகாரிகள் தலைமை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம்..! திடீர் உத்தரவிட்ட டிஜிபி- என்ன காரணம் தெரியுமா.?

Police registered a case against those who drove under the influence of alcohol in Chennai on New Year

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள்

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.நட்சத்திர விடுதிகளில் இரவு ஒரு மணி வரை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்திய இளைஞர்கள் உற்சாக மிகுதியில் சாலைகளில் வானத்தை ஓட்டினர். இதனையடுத்து காவல்துறையினர் அதிவேகமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்  வாகனத்தை ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Police registered a case against those who drove under the influence of alcohol in Chennai on New Year

அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

சென்னையில் புத்தாண்டையொட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், ஆபத்தான முறையில் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாநகர் முழுவதும் ஒட்டுமொத்தமாக 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஆவின் பால் விலை மீண்டும் உயர்வா.? 2 ரூபாய் உயர்த்தி பாக்கெட்டில் அச்சடிப்பு- விளக்கம் அளித்த ஆவின் நிர்வாகம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios