இடைநிலை ஆசிரியர்களை துச்சமாக நினைக்கும் திமுக அரசு.. இதுதான் உங்க திராவிட மாடலா? எகிறி அடிக்கும் டிடிவி..!

ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும்  2009ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல.

DMK government looks down on secondary teachers... TTV Dhinakaran

அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது. 

இதையும் படிங்க;- ஆள் பிடிக்கும் வேலையில் இபிஎஸ்.. அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை.. டிடிவி.தினகரன் திட்டவட்டம்..!

DMK government looks down on secondary teachers... TTV Dhinakaran

ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும்  2009ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல.

இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

DMK government looks down on secondary teachers... TTV Dhinakaran

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற மாணவச் செல்வங்களை உருவாக்கும் ஆசிரியர்களை ஊதியத்திற்காக இப்படி வருந்த வைப்பதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா? என டிடிவி.தினகரன் காட்டமாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  அமமுகவில் அதிரடி மாற்றம்.. டிடிவி.தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios