வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்.

10:04 PM (IST) Dec 17
ஸ்டாலின், உதயநிதி, வரிசையில் இன்ப நிதி முதல்வராக வேண்டும் அதுவே எனது ஆசை திமுகவினரின் எண்ணம் அதுதான் என்று கூறியுள்ளார் வி.பி ராஜன். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
09:05 PM (IST) Dec 17
காவி நிறத்தை தவறாகச் சித்தரித்துள்ள பதான் படத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்.
08:25 PM (IST) Dec 17
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
07:02 PM (IST) Dec 17
2022 ஆம் ஆண்டின் வருடாந்திர ட்ரெண்ட்ஸ் அறிக்கையை ஸ்விக்கி தற்போது வெளியிட்டுள்ளது.
06:45 PM (IST) Dec 17
விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸ் ஆன நாஞ்சில் விஜயனை வளசரவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் படிக்க
06:15 PM (IST) Dec 17
ரெட் ஜெயண்ட்டின் லோகோ திரையிடப்படும்போது உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது, அதிலிருந்து உதயநிதியின் பெயரை தூக்கிவிட்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் வழங்கும் என்று குறிப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.மேலும் படிக்க
05:49 PM (IST) Dec 17
திமுகவில் 10வது இடத்தில் உள்ள அமைச்சர், அதிகாரத்தையும் ஆட்சியையும் வைத்து சினிமாவை எவ்வளவு நாள் வைத்துக் கொள்கிறார்கள் என பார்ப்போம் என்று சவால் விட்டுள்ளார் அண்ணாமலை.
05:19 PM (IST) Dec 17
மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
04:49 PM (IST) Dec 17
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறதாம். இதற்கு தனுஷ் மட்டும் ஓகே சொல்லிவிட்டால் ரோலெக்ஸ் சூர்யா ரேஞ்சுக்கு அவரது வில்லன் கேரக்டர் பேசப்படும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. மேலும் படிக்க
04:03 PM (IST) Dec 17
உதயநிதி ஸ்டாலினுக்கு 2022-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்துள்ளது. அரசியல், சினிமா என இரண்டிலும் இந்த ஆண்டு அவர் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். குறிப்பாக சினிமாவில் விநியோகஸ்தராக இவர் வாங்கி வெளியிட்ட படங்களெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. அவற்றில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:34 PM (IST) Dec 17
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் அணி அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
02:50 PM (IST) Dec 17
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தின் பெடாபுரம் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மிரெட்டி சீனு. இவர் தனது சகோதரர் ராஜு உடன் பெடாபுரத்தில் உள்ள தியேட்டருக்கு அவதார் 2 படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்தபோது லக்ஷ்மிரெட்டி சீனுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது மேலும் படிக்க
02:50 PM (IST) Dec 17
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
02:18 PM (IST) Dec 17
ஜப்பானில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்கிற சாதனையை ஆர்.ஆர்.ஆர் படைத்துள்ளது. முத்து படம் ஜப்பானில் 23.5 கோடி வசூலித்து இருந்த நிலையில், ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.24 கோடி வசூலித்து அந்த சாதனையை முறியடித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க
12:56 PM (IST) Dec 17
சேலத்தில் திமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில் வருங்காலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினராக மாறுவார்கள். அனைத்திலும் திமுக வெற்றிபெறும். எதிர்க்கட்சி நினைப்பது எப்போதும் நடக்காது. வாரிசு அரசியல் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள்.
12:04 PM (IST) Dec 17
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கி இருந்தாலும், அந்நிறுவனம் ரெட் ஜெயண்ட்டிடம் சில ஏரியாக்களை கொடுத்துள்ளது.மேலும் படிக்க
11:45 AM (IST) Dec 17
வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
11:24 AM (IST) Dec 17
வாரிசு படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லை என்றும், அது தெலுங்கு நடிகர்களுக்காக எழுதப்பட்ட கதை என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் படிக்க
10:49 AM (IST) Dec 17
இந்தியாவில் முதல்நாளில் அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படம் என்கிற சாதனையை கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் பெற்று இருந்தது. அந்த சாதனையை அவதார் 2 முறியடித்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:27 AM (IST) Dec 17
தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 20 மற்றும் 21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09:58 AM (IST) Dec 17
அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகைகளை சேதப்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.
09:31 AM (IST) Dec 17
பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
08:56 AM (IST) Dec 17
தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையில், 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
08:42 AM (IST) Dec 17
திருவண்ணாமலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீப நேற்றுடன் நிறைவு அடைந்தது. இதனையடுத்து, 2,668 அடி உயரம் மலை உச்சியில் இருந்த கொப்பரையை கோவில் ஊழியர்களால், அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கொண்டு வருகின்றனர்.
08:03 AM (IST) Dec 17
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:31 AM (IST) Dec 17
சேலம் எம்ஜிஆர், ஜெயலலிதா கோட்டையாக இருக்கலாம். இனிவரும் காலத்தில் தளபதி கோட்டையாக மாறும், எதிர்க்கட்சி நினைப்பது எப்போதும் நடக்காது. சேலத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறும். வாரிசு அரசியல் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, வாரிசு இல்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும். வாரிசு அரசியல் வாய்ப்பு இருந்தால், உங்களால் முடிந்தால் செய்யுங்கள். உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம் என அமைச்சர் கே.என்.நேரு ஆவேசமாக பேசியுள்ளார்.
07:30 AM (IST) Dec 17
அரை நூற்றாண்டு காலம் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான்.
07:01 AM (IST) Dec 17
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் கிடைக்கும் வரி வருவாய்க்காகவும், இதர வருவாய்க்காகவும் அதனை தடை செய்ய மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது. ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு இயற்றிய அவசர தடை சட்டத்திற்கு அனுமதி தராமல் மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.