ஷாருக்கான், தீபிகா படுகோன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. பதான் பட சர்ச்சை - பாஜக எம்.பி ஆவேசம்
காவி நிறத்தை தவறாகச் சித்தரித்துள்ள பதான் படத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர்.
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வரும் இந்தி படம், பதான். இதில் இடம்பெறும் பேஷரம் ரங் என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. அதில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும் டூயட் பாடுகின்றனர்.
இதனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.சாதுக்கள், சாமியார்கள், மகான்கள், சித்தர்கள் அணியும் காவி நிற உடையை இப்படியா ஆபாசமாக காட்டி இந்துக்களின் மனங்களை புண்படுத்துவது என கேள்வி எழுப்பியுள்ளனர் இந்துத்துவா ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க..டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ
சமூகவலைதளங்களில் #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை டிரென்டாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் பலவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், காவி நிறத்தை தவறாகச் சித்தரித்துள்ள இப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது. அவர்களின் எந்தப் படத்தையும் பார்க்கக் கூடாது. அவர்கள் சீக்கிரமே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். அந்தக் காவி நிற உடைக் காட்சியை மாற்றவில்லை என்றால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
காவி நிறம் என்பது நம் நாட்டின் பெருமை. அது தேசியக்கொடியிலும் உள்ளது. அதனை அவமதிக்கும் முயற்சி நடந்தால், யாரையும் தப்ப விடமாட்டோம். தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்படும் என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.. கடுப்பான தமிழக பாஜக !
இதையும் படிங்க..தமிழ்நாட்டின் நம்பர் 1 நடிகர்.. சினிமா, அதிகாரம் எவ்வளவு நாளுக்கு? திமுகவுக்கு சவால் விடும் அண்ணாமலை