தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ஆவடி:

பட்டாபிராம் சிடிஎச் சாலை, ஐயப்பன் நகர், தண்டுறை, ராஜீவ் காந்தி நகர், சத்திரம், காந்தி நகர், பட்டாபிராம் அனைத்து பகுதியும், விஜிஎன் நகர் முழுவதும், சிரஞ்சீவி நகர், டிரைவர்ஸ் காலனி, கண்ணப்பாளையம், லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் அடங்கும்.

தாம்பரம்:

சித்தலபாக்கம் ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, TNHB காலனி, ராயல் கார்டன், வெங்கடேஸ்வரா நகர், அண்ணாசாலை, வேளச்சேரி பிரதான சாலை, பாலாஜி நகர், மாடம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.