தமிழறிஞரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லைக் கண்ணன் (77) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

09:06 PM (IST) Aug 18
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அவர் கால்நடையாக சென்று சாமி தரிசனம் செய்ததற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க
05:57 PM (IST) Aug 18
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லாக இலவச பயிற்சி சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம்.மேலும் படிக்க
05:28 PM (IST) Aug 18
பேருந்துகளில் பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் படிக்க
04:54 PM (IST) Aug 18
நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற கோட் அணிந்து, டீப்பாக கவர்ச்சி காட்டியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க...
04:53 PM (IST) Aug 18
நடிகை மிருணாளினி ரவி, கருப்பு நிற ஸ்ட்ராப் லெஸ் உடையில்... கிக் ஏற்றும் விதமாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் படிக்க...
04:29 PM (IST) Aug 18
பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் திருமண நினைவுகளை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், கணேஷ் - ஆர்த்தியின் ப்ரோமோ வீடியோவை பார்த்து நீங்கள் ரொம்ப லக்கி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் படிக்க...
03:57 PM (IST) Aug 18
சென்னையில் பிங்க நிற பேருந்தின் கண்ணாடியை கல்லூரி மாணவர்கள் கல்லெறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
03:21 PM (IST) Aug 18
தனுஷ் என்பவர் தற்போது சாதாரண நடிகர் அல்ல அவர் ஹாலிவுட் பிரபலம் ஒருவேளை அனிருத் தான் இறங்கி வந்திருப்பார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எப்படியோ இருவரின் கூட்டணியில் நல்ல பாடல்கள் ரசிகர்களுக்கு மீண்டும் கிடைத்து விட்டது.
7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்போ...மீண்டும் அமைய என்ன காரணம் ?
03:14 PM (IST) Aug 18
நடிகர் ராஜுவின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுயநினைவு இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதய செயல்பாட்டை பராமரிக்க வழங்கப்பட்ட மருந்து மற்றும் சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளனதாம்.
மேலும் படிக்க... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்.. உடல்நிலை குறித்த தகவல் வெளியானது
03:12 PM (IST) Aug 18
கேரள அரசு , ஒலா, உபர் போன்று ”கேரளா சவாரி” எனும் பெயரில் ஆன்லைன் கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் டாக்சி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் ஆன்லைன் டாக்சி சேவை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. மேலும் படிக்க
02:41 PM (IST) Aug 18
டெல்டா மாவட்டங்கள் மற்றும் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
02:18 PM (IST) Aug 18
பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
02:14 PM (IST) Aug 18
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும். ஆனால், மத்திய அரசு இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கபட்டு வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கூறினார்.மேலும் படிக்க
01:32 PM (IST) Aug 18
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஆனால், இவர் தர்மயுத்தத்தை தொடங்கியபோது அதன் முக்கிய நோக்கமே சசிகலாவை கட்சியில் ஏற்கக்கூடாது என்பது தான் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
01:18 PM (IST) Aug 18
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத் அவசர தடை சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.
01:05 PM (IST) Aug 18
சென்னையில் அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளதாக எனப்து குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
12:56 PM (IST) Aug 18
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது.
12:45 PM (IST) Aug 18
அ.தி.மு.க தலைமை கழக அலுவலக சாவியை ஈ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
12:20 PM (IST) Aug 18
அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து தள்ளுபடி செய்துள்ளது.
12:12 PM (IST) Aug 18
கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உத்தரவை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
11:56 AM (IST) Aug 18
நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணித்த நிலை மீண்டும் வர வேண்டும் என்பதே எனது தலையாய கோரிக்கை என தெரிவித்துள்ள ஓபிஸ், கட்சிக்காக உழைத்த சின்னம்மாவையும் , டிடிவி தினகரைனையும் அதிமுகவில் இணைக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க..
11:53 AM (IST) Aug 18
ராக்கெட்டரி படத்திற்காக மாதவன் தனது வீட்டை இழந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்த ரசிகர் ஒருவர் தனது பதிவில் ராக்கெட்டுக்கு நிதி அளிக்க மாதவன் தனது வீட்டை இழந்ததாக கூறியதோடு, அசல் இயக்குனர் விலகிய போது படத்தை மாதவன் இயக்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ
11:42 AM (IST) Aug 18
அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக வருவாய் துறை மற்றும் இபிஎஸ் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
11:08 AM (IST) Aug 18
கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும். இன்றைய சூழ்லில் அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை அனைத்தையும் மனங்களில் இருந்து தூக்கி எரிய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
11:08 AM (IST) Aug 18
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
10:56 AM (IST) Aug 18
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு வருகை தர சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்ததாகவும், நெருங்கிய நண்பர் என்பதால் அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்
10:47 AM (IST) Aug 18
ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முகச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.மேலும் படிக்க
10:43 AM (IST) Aug 18
திமுகவின் நலன் கருதி ஒன்றிணைந்து செயல்பட பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ஏற்பட்ட கசப்புகளை மனதில் வைக்காமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
10:40 AM (IST) Aug 18
மதுரை அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்ததியுள்ளது. மனைவி, மகன் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் விவசாயி முருகன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
09:58 AM (IST) Aug 18
நரிக்குறவர் பெண்மணிக்கு லோன், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், திமுக அரசு விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
09:53 AM (IST) Aug 18
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றுக்கு அதிகாலை காட்சிக்கு வருகை தந்த தனுஷின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க... அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்
09:35 AM (IST) Aug 18
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் வழங்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
09:21 AM (IST) Aug 18
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைசெய்து. மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய பேரவமானம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
08:49 AM (IST) Aug 18
நரிக்குறவர்களுக்கு லோன் தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும் கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லையென நரிக்குறவ பெண்மணி அஸ்வினி வேதனையோடு தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க...
08:48 AM (IST) Aug 18
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
08:41 AM (IST) Aug 18
Thiruchitrambalam twitter review : இன்று திருச்சிற்றம்பலம்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அந்த ட்வீட்டர் ரிவ்யூக்களை இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க...Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...
08:23 AM (IST) Aug 18
அனைத்து அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிமாற்றங்கள் மற்றும் கட்டண அடிப்படையில் பரிமாற்றங்களை வழங்குகின்றன. அதுகுறித்த விவரங்களைக் காணலாம்.
08:21 AM (IST) Aug 18
Suriyan Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் ராசி மாறியுள்ளார். இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பெரும் பண ஆதாயத்தை உண்டாக்குகின்றன. இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
07:48 AM (IST) Aug 18
சென்னை வானகரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
07:39 AM (IST) Aug 18
ஷியாம் சிங்க ராய் பின்னர் நெட்ஃபிக்ஸில் திரையிடப்பட்டு அதிக மதிப்பீடுகளையும் பெற்று பத்து வாரங்களில் சிறந்த ட்ரெண்டிங் படங்களில் ஒன்றானது.