விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்‌ தொடர வேண்டும்‌. ஆனால்‌, மத்திய அரசு இலவச திட்டங்கள்‌ வேண்டாம்‌ என்பதில்‌ தெளிவாக இருக்கிறது என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கபட்டு வரும்‌ இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக கூறினார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்‌துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரம்‌, சூரிய மின்‌சக்தி, காற்றாலை மூலம்‌ பெறப்பட்ட மின்‌ உற்பத்தி இந்த ஆண்டு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு நாட்களுக்கு முன்பு சூரிய மின்‌ சக்தி, காற்றாலை மின்‌ உற்பத்தியாளர்களை சந்தித்தபோது மின்சார வாரிய வரலாற்றிலேயே இந்த ஆண்டில்‌ தான்‌ உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம்‌ முழுவதும்‌ பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு யூனிட்‌ கூட வீணாகவில்லை எனவும் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார். 

மின்சார வாரியத்திற்கு கடந்த வருடம்‌ 2,200 கோடி அளவிற்கு வட்டி மற்றும்‌ இதர இனங்கல்‌ மூலம்‌ சேமிப்புகள்‌ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு, கடந்த ஆண்டுகளைப்‌ போல்‌ கடன்‌ அதிகரிக்காமல்‌ இருப்பதற்கு நிர்வாகத்தின்‌ செயல்பாடுகள்‌ மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் படிக்க:திடீர் ட்விஸ்ட் !! வங்கி கொள்ளையில் போலீசுக்கு தொடர்பு.. காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து தங்க நகைகள் மீட்பு..

100 யூனிட்‌ இலவச மின்சாரம்‌ பயன்படுத்துவபவர்களுக்கு இலவச திட்டங்களே இருக்கக்‌ கூடாது என்பது ஏற்புடையதல்ல என்று கூறிய அமைச்சர், விவசாயிகளின்‌ வாழ்க்கையில்‌ என்ன மிச்சம்‌ பண்ண முடியும்‌. என்று தெரிவித்தார். விவசாயிகளின் முதலீட்டிற்கும்‌, கடைசியாக இருக்கக்கூடிய வருமானத்தையும்‌ பார்க்கும்போது மிகப்‌ பெரிய இழப்பை
சந்திக்ககூடிய நிலை இருக்கிறது. 

எனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்‌ தொடர வேண்டும்‌. ஆனால்‌, மத்திய அரசு இலவச திட்டங்கள்‌ வேண்டாம்‌ என்பதில்‌ தெளிவாக இருக்கிறது என்ற அவர், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ இலவச திட்டங்கள்‌ தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க:16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்.. தாய் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

மதுரை மீனாட்சி அம்மன்‌ கோவில்‌ சுற்றி புதைவட கம்பிகள்‌ அமைக்கும்‌ பணிகளும்‌ விரைவில்‌ ஆரம்பிக்கப்படும்‌ என்றும் சென்ற இரு வாரங்களுக்கு மேல்‌ மழை பெய்ததால்‌ பாதிக்கப்பட்ட இடங்களில்‌ சீரான மின்‌ விநியோகம்‌ வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். பின்னர்‌, அமைச்சர்‌ செந்தில்பாலாஜி, 24 மணி நேர மின்‌ நுகர்வோர்‌ சேவை மையமான மின்னகத்தில்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.