Asianet News TamilAsianet News Tamil

ராக்கெட்ரி  படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ 

ராக்கெட்டரி படத்திற்காக மாதவன் தனது வீட்டை இழந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்த ரசிகர் ஒருவர் தனது பதிவில் ராக்கெட்டுக்கு நிதி அளிக்க மாதவன் தனது வீட்டை இழந்ததாக கூறியதோடு,  அசல் இயக்குனர் விலகிய போது படத்தை மாதவன் இயக்கியதாகவும் கூறியுள்ளார்.

madhavan explain about he lost his house for rocketry the nambi effect movie production
Author
Chennai, First Published Aug 18, 2022, 11:44 AM IST

90களில் சாக்லேட் பாய் மாதவன் இவரை இளம் பெண்கள் மேடி என அழைத்து கொண்டாடி வருகின்றனர். தற்போது மாதவன் நடிகரிலிருந்து இயக்குனராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். இவரின் முதல் படமான  ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் திரையரங்குகளில் அதிக வசூலை படம் பெற்றதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. படம் குறித்து இந்தியா முழுவதும் உள்ள பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

அதோடு கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டு அமைச்சர்கள் முதல் பிரமுகர்கள் வரை அனைவரின் வாழ்த்துக்களையும் ராக்கெட்டர பெற்றிருந்தது. அதோடு பிரதமர் மோடி பட குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தி இருந்தார். அதோடு அமைச்சர்கள் முன்னிலையில் இந்த படம் பாராளுமன்றத்தில் திரையிடப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது.

மேலும் செய்திகளுக்கு...வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்

madhavan explain about he lost his house for rocketry the nambi effect movie production

உளவு பார்த்ததாக தவறாக நிரூபிக்கப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட விஞ்ஞானி மற்றும் அவரது குடும்பத்தினரின் நிலையை கண்முன் நிறுத்தியது ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட். இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா இருவரும் காமியோ ரோலில் நடிப்பதற்காக எந்த நிதியையும் பெறவில்லை என மாதவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்

இந்நிலையில் படத்திற்காக மாதவன் தனது வீட்டை இழந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்த ரசிகர் ஒருவர் தனது பதிவில் ராக்கெட்டுக்கு  நிதி அளிக்க மாதவன் தனது வீட்டை இழந்ததாக கூறியதோடு, அசல் இயக்குனர் விலகிய போது படத்தை மாதவன் இயக்கியதாகவும் கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த மாதவன் தனது வீட்டை இழக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து எழுதிய மேடி தயவுசெய்து என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். நான் எனது வீடு உட்பட எதையும் இழக்கவில்லை. இதில் ஈடுபட்டுள்ள அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் நாங்கள் அனைவரும் மிகவும் நல்ல மற்றும் பெருமையான லாபம்பெற்றுள்ளோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன் என எழுதியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...Thiruchitrambalam twitter review : நீண்ட எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்...

Follow Us:
Download App:
  • android
  • ios