ஓபிஎஸ் சந்தோஷத்திற்கு செக் வைக்கும் இபிஎஸ்...! பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநிலையில், அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது
 

Appeal against AIADMK general committee decision in Madras High Court by EPS

பொதுக்குழு செல்லாது- நீதிபதி

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.  அதை தொடர்ந்து புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த 10 மற்றும் 11ம் தேதிகள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்குகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

இபிஎஸ் கனவில் மண்ணைவாரி போட்டதற்கு இதுதான் காரணம்.. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதுதான்..!

Appeal against AIADMK general committee decision in Madras High Court by EPS

மேல் முறையீடு செய்த இபிஎஸ்

இந்த உத்தரவையடுத்து ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்த நிலையில் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவசர ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் கோரிக்கை வைத்தார்.   ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் நியமனம் செல்லாது, ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்திருந்த நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேல்முறையீட்டு மனு இன்று மதியத்திற்குள்  முறையாக எண்ணிடப்பட்டுவிட்டால்,  திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.  

இதையும் படியுங்கள்

அடுத்த பரபரப்பு! இந்த வழக்கிலாவது இபிஎஸ் சாதிப்பாரா? அல்லது மீண்டும் சறுக்குவாரா? ஓபிஎஸ் மனு இன்று விசாரணை.!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios