தொண்டர் பலம் இருக்கிறது என்றால் பொதுக்குழுலில் நிரூபிக்கட்டும்! OPS கோரிக்கையை நிராகரித்து சவால் விடும் EPS.!
ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீதி தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும்? கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான், திமுகவுடன் உறவு வைத்திருந்தார் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து எவ்வாறு செயல்பட முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது சிறிய சிறிய பிரச்சனைகளாலும், எங்களுக்குள் கருத்து வேறுபாட்டாலும் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது. கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும். இன்றைய சூழலில் அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் யாராலும் வெல்ல முடியாது. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை அனைத்தையும் மனங்களில் இருந்து தூக்கி எரிய வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது.
இதையும் படிங்க;- இரட்டை இலையை முடக்க வேண்டும்...! உச்சநீதிமன்றத்தில் வழக்கு... எச்சரிக்கை விடுத்த நீதிபதி
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இபிஎஸ்;- அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடனா இணைவது? தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி ஒன்றிணைய முடியும்? கட்சி உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி செயல்பட முடியும்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீதி தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர். அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும்? கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான், திமுகவுடன் உறவு வைத்திருந்தார் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதனை தடுக்கும் போது தான் சில பிரச்னைகள் உருவாகின்றன. அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம். செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும. ஒப்புதல் பெறாததால் இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது. ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள் தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். யார் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்பதை யாரும் குறிப்பிடவில்லை. தொண்டர்கள் பலம் ஓபிஎஸ்-க்கு இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே.
இதையும் படிங்க;- சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும்...! இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்து கூடவே ஆப்பு வைக்கவும் தயாரான ஓபிஎஸ்..!
நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன். எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. கட்சியில் படிப்படியாக உயர்ந்தவன் நான். நான் இல்லை என்றாலும் கட்சிக்கு வேறு ஒரு தலைவர் வருவார். ஆனால், கட்சி விதிகளை மதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.