படியில் தொங்கி மாணவர்கள் ரகளை.. நடத்துனர் கண்டித்ததால் பேருந்து கண்ணாடியை உடைத்து அட்டூழியம்..
சென்னையில் பிங்க நிற பேருந்தின் கண்ணாடியை கல்லூரி மாணவர்கள் கல்லெறிந்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பிராட்வேயில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கி பயணிகளுடன் பிங்க நிற மாநகர பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பல்லவன் சாலை நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, 10 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறினர். மேலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிய படியும் பாட்டுப்பாடி கிண்டலடித்து கொண்டு பயணித்தனர்.
மேலும் படிக்க:ஓபிஎஸ் பசுந்தோல் போர்த்திய புலி.! இபிஎஸ்யை அழைக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது..!ராஜன் செல்லப்பா ஆவேசம்
இதனால் ஓட்டுநனர் ராஜேந்திரன் மற்றும் நடத்துனர் சசிகுமார் ஆகியோர் மாணவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்து தேவி தியேட்டர் அருகில் நின்ற போது, கீழே இறங்கி பாட்டிலால் பேருந்து பின் பக்க கண்ணாடியை உடைந்து, தப்பித்து ஓடியுள்ளனர்.
மேலும் படிக்க: நெல்லை கண்ணனின் வாழ்க்கை வரலாறு.. ஒரு சிறப்பு பார்வை.
மாணவர்களின் இந்த தாக்குதலில், நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கண்ணாடி உடைத்து தப்பியோடிய கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.