Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் பசுத்தோல் போர்த்திய புலி.! இபிஎஸ்யை அழைக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது..!ராஜன் செல்லப்பா ஆவேசம்

திமுகவுடன் தொடர் கொண்டுள்ள ஓபிஎஸ்யிடம் கசப்பை மறந்து எப்படி ஒன்று சேர முடியும் என அதிமுக மூத்த நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினருமான வி.வி ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

Senior AIADMK official Rajan Chellappa said that none of the AIADMK leaders accepted OPS
Author
Madurai, First Published Aug 18, 2022, 2:59 PM IST

இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஒற்றை தலைமை விவகாரத்தால்  அதிமுக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது , அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கழக ஒற்றுமையையே அனைவருக்கும் பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.  இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக அமைப்புச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா   எடப்பாடியாருக்கு வலிமைமிக்க தீர்ப்பினை, கழகத் தொண்டர்கள் ஏற்கனவே வழங்கி விட்டனர், அது மட்டும் அல்ல எடப்பாடியாருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் 2663 பொதுக்குழு உறுப்பினர்களில், அதிக மெஜாரிட்டியாக எடப்பாடியாரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்தனர். சிலர் இடைக்கால தீர்ப்பை  பெற்று சில அறிக்கையை விடுகின்றனர், இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை மேல்முறையீடு உள்ளது, என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,  

சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும்...! இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்து கூடவே ஆப்பு வைக்கவும் தயாரான ஓபிஎஸ்..!

Senior AIADMK official Rajan Chellappa said that none of the AIADMK leaders accepted OPS

ஓபிஎஸ்சை யாரும் ஆதரிக்கவில்லை

கசப்பை மறக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார், ஆனால் திமுகவுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? இனி வசந்த காலம் என்கிறார் ஒபிஎஸ், திமுகவில் தொடர்பு உள்ளவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்கமுடியும்.  ஒபிஎஸ்யை இதுவரையும் யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை, இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் உள்ளது, மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடியார் தலைமை உள்ளது, திமுகவிற்கு எதிர்க்கக்கூடிய தலைமையாக எடப்பாடியார் தலைமை உள்ளது என தெரிவித்தார். தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி வளர்க்க முடியாது, நீதிமன்றம்  கட்சிகளை நடத்த முடியாது, கட்சி விவகாரங்களை தலையிடாது என்பது நாடறிந்த உண்மை. ஓபிஎஸ், எடப்பாடியாரை அழைக்கிறார், அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார், அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை,  அவர் அழைத்தது தவறு,  கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் கூறுகிறார். நாடாளுமன்ற வேட்பாளர்கள், சட்டமன்ற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது, யாரும் கூட்டுத் தலைமையை விரும்பவில்லை, இரட்டை தலைமையை ஏற்றுக் கொள்ள மனநிலையில் யாரும் இல்லை என கூறினார்.

விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஸ்டாலின்.! நம்ப வைத்து ஏமாற்றுவது தான் சமூக நீதியா.? அண்ணாமலை ஆவேசம்

Senior AIADMK official Rajan Chellappa said that none of the AIADMK leaders accepted OPS

ஓபிஎஸ் பசுந்தோல் போர்த்திய புலி

எப்பொழுது எல்லாம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறதோ, அப்போது எல்லம் தென் மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் வருகிறார், இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார், தென் மாவட்டம் என்பது ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது, தென் மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு தனி செல்வாக்கு என்பது கிடையாது.  ஜானகி அம்மாள் புரட்சித்தலைவி அம்மாவிடம் கட்சியை விட்டுக் கொடுத்தார்கள், ஆனால் ஓபிஎஸ் அப்படி இல்ல பசுந்தோல் போர்த்திய புலி ,தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கழக தொண்டர்களும், மக்களும் எடப்பாடியார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலக சாவி யாருக்கு..? ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்...! உற்சாகத்தில் இபிஎஸ்

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios