- Home
- Lifestyle
- Suriyan Peyarchi: சூரியன் பெயர்ச்சியால் ..ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு அமோகமாக இருக்கும், உங்கள் ராசி என்ன
Suriyan Peyarchi: சூரியன் பெயர்ச்சியால் ..ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு அமோகமாக இருக்கும், உங்கள் ராசி என்ன
Suriyan Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் ராசி மாறியுள்ளார். இதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பெரும் பண ஆதாயத்தை உண்டாக்குகின்றன. இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.

Suriyan Peyarchi 2022 Palangal:
சூரியன் ராசி மாற்றம் 2022:
ஜோதிடத்தின் பார்வையில், ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் ராசி மாறியுள்ளார். அடுத்த நாள் கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதி தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டப்படுகிறது. ஆன்மீக கண்ணோட்டத்தில், இந்த இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகளும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடக்கின்றன. இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கும். சூரியனின் சஞ்சாரம் மற்றும் இந்த வாரத்தின் கிரக நிலைகள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும்.இவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Suriyan Peyarchi 2022 Palangal:
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நாட்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இவர்களுக்கு இந்த நேரத்தில் பல இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும். உங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த நேரத்தில், நீங்கள் தொழிலில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அவற்றிற்கு தீர்வு கிடைக்கும். கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இது நாள்மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். நிதி பிரச்சனைகள் நீங்கும். வேலை செய்பவர்களுக்கு, தொழிலில் ஏற்படும் மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Suriyan Peyarchi 2022 Palangal:
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிகப்படியான பலன்களை அளிக்கும். அவர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். பல நாட்களாக சிக்கியிருந்த பணம் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு அதிகப் பணம் வரும். தொழிலதிபர்கள் தொழிலில் அதிக லாபம் பெறுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.