Rahu Ketu Peyarchi 2022: மேஷ ராசியில் ராகுவுடன், சந்திரன் கூட்டணி, சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய 4 ராசிகள்
Rahu Ketu Peyarchi 2022 Palangal: ராகுவுடன், சந்திரன் இணைவதன் காரணமாக, கிரகண யோகம் உருவாகிறது இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
Rahu Ketu Peyarchi 2022:
ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகமான ராகு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பயணம் செய்வார்கள். தீய கிரகமான ராகுவின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரும். அதன்படி, தற்போது சந்திரன் மற்றும் ராகு இணைவதன் காரணமாக கிரகண யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஆகஸ்ட் 16 துவங்கியது, இது வரும் ஆகஸ்ட் 06:07 வரை நீடிக்கும். இந்த இரு கிரகங்களும் மேஷ ராசியில் இணைகிறார்கள்.இதனால் எந்தெந்த ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Rahu Ketu Peyarchi 2022:
கடகம்:
தொழிலில் பொறுப்புகளை எச்சரிக்கையுடன் நிறைவேற்ற வேண்டும். சக ஊழியர்களுடனும் உயர் அதிகாரிகளுடனும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலதிகாரியின் அறிவுரையை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் போது, மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் பொறுமையாக இருப்பது நல்லது. ஆன்மீக நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்க கூடும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க வேண்டும். தந்தைக்கு சேவை செய்யுங்கள். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க வேண்டும். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துங்கள்.
Rahu Ketu Peyarchi 2022:
துலாம் :
வியாபாரம் மற்றும் வேலையில் இருப்பவர்களுக்கு சிறந்த நேரம். மரியாதை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன், வணிக கூட்டாளியுடன் உறவு வலுவாக இருக்கும். குறிப்பாக வணிகத்தில், லாப எதிர்பார்ப்பு அதிகமாகத் தெரியும். வயிறு சம்பந்தமான நோய்கள், சளி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். எனவே உணவி விஷயத்தில் கவனம் தேவை.
Sun and Venus Transit
கன்னி:
உடல்நலம் தொடர்பான விஷயங்களில் குறிப்பாக எச்சரிக்கையாக இருங்கள்.இந்த நேரத்தில் வயிறு சம்பந்தமான நோய்கள், சளி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். எனவே உணவி விஷயத்தில் கவனம் தேவை. குழந்தைகளின் வேலை மற்றும் படிப்பில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். வயிறு தொடர்பான நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.