டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

06:40 PM (IST) Apr 26
பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெறும் வந்தியத்தேவன் - ஆழ்வார்க்கடியான் நம்பி இடையேயான காமெடி காட்சி யூடியூப்பில் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
06:15 PM (IST) Apr 26
குடிபோதையில் படப்பிடிப்பிற்கு வந்து அலப்பறை செய்து வந்த பிரபல மலையாள நடிகர்கள் இருவர் மீது அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் படிக்க
05:27 PM (IST) Apr 26
நடிகர் விஜய் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்றில் தனக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் கண்டிப்பா அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் பேசி உள்ளார். மேலும் படிக்க
04:49 PM (IST) Apr 26
சூடானின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் அல்-பஷீர் மோதல்கள் வெடிப்பதற்கு முன்பே ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
04:11 PM (IST) Apr 26
ஆடியோ வெளியிட்டு திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான பதில் அளித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சி என்று குறிப்பிட்டுள்ள அவர், சில வீடியோ உதாரணங்களைச் சுட்டிக்காட்டி பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்த ஆடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஜோடிக்கப்பட்டவை என்று குறிப்பிடுகிறார்.
03:52 PM (IST) Apr 26
நடிகர் அஜித் தற்போது நேபாளத்தில் உலக பைக் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்குள்ள ஹோட்டலில் சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
03:40 PM (IST) Apr 26
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று கூறியுள்ளார் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன்.
03:17 PM (IST) Apr 26
இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் டெல்லி செல்ல உள்ளார்.
02:48 PM (IST) Apr 26
விருது விழாவில் கலந்துகொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தன் மனைவி சாயிரா பானுவை இந்தியில் பேச வேண்டாம், தமிழில் பேசுமாறு கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
02:46 PM (IST) Apr 26
பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
02:13 PM (IST) Apr 26
திருச்சியில் நடைபெற்று வரும் முதல்வரின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியுடனான மோதல் குறித்தும் பேசி உள்ளார்.
02:01 PM (IST) Apr 26
பிரபல மலையாள நடிகர் மம்மூக்கோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
01:05 PM (IST) Apr 26
டிஆர்டிஓ DRDO CEPTAM 10 A மற்றும் A தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
12:45 PM (IST) Apr 26
நடிகை சமந்தா கிண்டலடித்ததை பார்த்து கடுப்பான பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு நான் வாய் திறந்தா சமந்தாவின் மானம் போயிரும் என சாடி உள்ளார். மேலும் படிக்க
12:29 PM (IST) Apr 26
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முறைகேடான கனிமவளக் கொள்ளையை ஆதரித்து கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் திமுக அரசின் மண்ணின் வளத்திற்கு எதிரான ஆட்சி நிர்வாகமே படுகொலைக்கு காரணம் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
12:26 PM (IST) Apr 26
வருகின்ற மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை உள்ளது. அவை எந்தெந்த நாட்கள் என்பதை இங்கே காண்போம்.
11:27 AM (IST) Apr 26
கஞ்சா கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது.
11:09 AM (IST) Apr 26
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ஆர். கார்த்திக் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையிnf அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாடு பிடி வீரர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
10:57 AM (IST) Apr 26
நீண்ட நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை பார்க்கலாம்.
10:37 AM (IST) Apr 26
கேரளாவில் வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி.யின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
09:46 AM (IST) Apr 26
இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் உரையாற்றுகிறார்.
09:41 AM (IST) Apr 26
முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவிற்கு சொந்தமாக இருந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே சசிகலா, முன்னாள் MLA ஆறுகுட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
08:54 AM (IST) Apr 26
மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலரை, கும்பல் ஒன்று அலுவலகத்துக்குள்ளே புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
08:16 AM (IST) Apr 26
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நிலவில் தரையிறங்க முடியாமல் ஜப்பானின் விண்கலம் தோல்வியில் முடிந்தது.
07:06 AM (IST) Apr 26
அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
07:05 AM (IST) Apr 26
பிடிஆர் பேசிய ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
07:05 AM (IST) Apr 26
தூத்துக்குடியில் விஏஒ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.