பிரபல பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. தலைதெறிக்க ஓடிய மாணவர்கள் - பரபரப்பு சம்பவம்
பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது மதுரா சாலை. இந்த சாலையில் அமைந்துள்ளது பிரபல டெல்லி பப்ளிக் ஸ்கூல். டிபிஎஸ் என்று அழைக்கப்படும் இப்பள்ளியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளது. உடனே பள்ளி நிர்வாகம் மாணவர்களையும் மற்றவர்களையும் வெளியேற்றினர்.
இன்று புதன்கிழமை காலை 10.30 மணி நிலவரப்படி, பள்ளி வளாகத்தில் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் தியோ தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை வெடிபொருட்கள் குறித்த எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக அதிகாரி கூறினார்.
ஆனால் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தது, அதைத் தொடர்ந்து தேடுதல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சர்வரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும், இதனால் அனுப்பியவரை அடையாளம் காண நேரம் எடுக்கும் என்றும் டிசிபி தெரிவித்தார்.
இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பள்ளிக்கு இதேபோன்ற மின்னஞ்சலைப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்த பள்ளியில் இவ்வாறு நடப்பது இரண்டாம் முறையாகும். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..தனது ஊழியருக்கு 1500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி..யாருப்பா அது.?