தனது ஊழியருக்கு 1500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி..யாருப்பா அது.?

முகேஷ் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு ரூ.1500 கோடியை வீட்டிற்கு பரிசாக அளித்துள்ளார்.

Mukesh Ambani gifts his employee a house worth Rs 1,500 crore

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். முகேஷ் அம்பானி தனது ஊழியர்களை நன்றாக நடத்துவதில் பெயர் பெற்றவர். முகேஷ் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு மும்பையில் ரூ.1500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக வழங்கியுள்ளார். அந்த ஊழியரின் பெயர் மனோஜ் மோடி.

Mukesh Ambani gifts his employee a house worth Rs 1,500 crore

22 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த சொத்து மும்பையில் நேபியன் கடல் சாலையில் அமைந்துள்ளது. Magicbricks.com இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சொத்து மதிப்பு 1500 கோடி. மனோஜ் மோடி முகேஷ் அம்பானியின் பேட்ச் மேட் ஆவார். இருவரும் மும்பையில் வேதியியல் தொழில்நுட்பத் துறையில் ஒன்றாகப் படித்தவர்கள். 

இதையும் படிங்க..அவரே வந்துட்டாரா.! கிறிஸ்துவ சமூக ஓட்டு இனி பாஜகவுக்கு தான்.. கேரளா விசிட்டில் சிக்சர் அடித்த மோடி!!

Mukesh Ambani gifts his employee a house worth Rs 1,500 crore

முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி 1980 களின் முற்பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்தை வழிநடத்திய போது மனோஜ் மோடி அதில் சேர்ந்தார். மனோஜ் மோடி முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானியுடன் நீண்ட கால நண்பர் ஆவார். மனோஜ் மோடி இப்போது முகேஷ் அம்பானியின் குழந்தைகளான ஆகாஷ் இம்பானி மற்றும் இஷா அம்பானியுடன் பணியாற்றி வருகிறார்.

Mukesh Ambani gifts his employee a house worth Rs 1,500 crore

ரிலையன்ஸ் நிறுவனத்தால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு மூளையாக செயல்பட்டவர் மனோஜ் மோடி.  மனோஜ் மோடி தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி பரிசளித்த வீட்டை தலதி & பார்ட்னர்ஸ் எல்.எல்.பி வடிவமைத்துள்ளது, இந்த வீட்டுக்கு தேவையான பொருட்கள் சில இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios