Asianet News TamilAsianet News Tamil

சூடு பிடிக்கும் கொட நாடு கொலை வழக்கு..! சசிகலா மற்றும் எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவிற்கு சொந்தமாக இருந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி  வி.கே சசிகலா, முன்னாள் MLA ஆறுகுட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

CBCID police plan to interrogate Sasikala in connection with Koda Nadu murder case
Author
First Published Apr 26, 2023, 9:38 AM IST

கொடநாடு கொலை வழக்கு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று கொடநாடு பங்களாவாகும், இந்த பங்களாவில் பல முறை முதலமைச்சர் முகாம் அலுவலகமாகவும் செயல்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் பல திருப்பங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு கொடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சி நடைபெற்ற போது அதனை தடுக்க முயன்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்புடையவர்களின் மரணம் பரப்பை ஏற்படுத்தியது.

CBCID police plan to interrogate Sasikala in connection with Koda Nadu murder case

சசிகலாவிடம் மீண்டும் விசாரணை

இதனையடுத்த இந்த வழக்கில் தொடர்புடைய சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி  வி.கே சசிகலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம்  விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசாரும் விசாரிக்க உள்ளனர்.

CBCID police plan to interrogate Sasikala in connection with Koda Nadu murder case

ஜோதிடரிடமும் விசாரணை

இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தின் முக்கிய பங்கு வகித்த  ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ்  கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த தினத்தன்று காலை எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஜோதிடரை கனகராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக கனகராஜ் சந்தித்த ஜோதிடரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. மே முதல் வாரத்தில் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios