பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர் கார்த்தி திடீர் தற்கொலை..! சோகத்தில் கிராம மக்கள்.! என்ன காரணம் தெரியுமா.?
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் ஜி.ஆர். கார்த்திக் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையிnf அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாடு பிடி வீரர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஜல்லிக்கட்டு போட்டி- ஜிஆர் கார்த்தி தற்கொலை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் பிரபலமானது. எங்கு போட்டி நடைபெற்றாலும் அந்த இடத்தில் ஜி.ஆர். கார்திக்கின் காளையும் களத்தில் கலக்கும், பங்கெடுக்கும் அனைத்து போட்டியிலும் வெற்றிகளை குவித்து வரும் அந்தளவிற்கு ஜல்லிக்கட்டு போட்டியை பற்றி தெரிந்தவர்களுக்கு ஜி.ஆர். கார்த்திக்கை பற்றி தெரியாமல் இருந்தது இல்லை. அந்தளவிற்கு ஜி.ஆர்.கார்த்தி பிரபலம். அலங்காநல்லூர், அவனியாபுரம் என எந்த இடத்திலும் ஜி.ஆர்.கார்திக்கின் காளை என்று சொன்னால் மாடு பிடி வீரர்களே அச்சம் அடைவார்கள். அந்தளவிற்கு மாடுகளை தரமாக வளர்த்து போட்டியில் கலக்கி வந்தார். இந்தநிலையில் ஜி.ஆர்.கார்த்திக் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த வாரம் கையை கத்தியால் அறுத்துகொண்டுள்ளார்.
சோகத்தில் மாடுபிடி வீரர்கள்
இதன் காரணமாக உயிருக்கு போராடியவரை அருகில் உள்ள மருத்தவமனையில் சேர்ந்தனர். ஆனால் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலை பாரத்து மாடு பிடி வீரர்கள் அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மகனுமான மதுரை அவனியாபுரம் ஜி.ஆர்.கார்த்திக் ஜி.ஆர் கார்த்திக்கின் உடலானது அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நீர்கோழியேந்தல் என்ற கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற உள்ளது. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதியில் ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த கார்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்கள்
திருப்பூரில் பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தல்; உதவி செய்வது போல் நடித்து பெண் கைவரிசை