Gold Rate Today : நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்த தங்க விலை..எவ்வளவு தெரியுமா?
நீண்ட நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை பார்க்கலாம்.
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறி, இறங்கி வருகிறது. அட்சய திருதியை வாரத்தில் கூட தங்கத்தின் விலை அதிகரித்தது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையின் உயர்வானது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5.630ஆக விற்பனையானது.
அதேபோல நேற்று 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,090ஆகவும், 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,720 ஆகவும் விற்பனையானது. இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 12 உயர்ந்து, 5,642க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து, 45,136க்கு விற்பனையாகிறது. இன்றைய வெள்ளி விலையானது கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ரூ.80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..தனது ஊழியருக்கு 1500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி..யாருப்பா அது.?