இப்படியா பண்றது.! பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ் எம்.பி..!
கேரளாவில் வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி.யின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, மாலப்புரம், கோழிகோடு, கண்ணூர், மற்றும் காசர்கோடு என 11 மாவட்டங்களை இணைக்கிறது. நேற்று காலை திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர், பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார்.
முதலாவது நடைமேடையில் இருந்து ரயிலைக் கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் ரயிலின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், மாநில முதல்வர் பினராய் விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ரயில் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், ஷோரனூர் சந்திப்பு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இந்த நிலையில் அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி.யின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஷோரனூர் சந்திப்பில் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அவரது ஆதரவாளர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. வந்தே பாரத் ரயில் ஷோரனூர் சந்திப்பை வந்தடைந்தபோது, மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆர்பிஎஃப் வீரர்கள் சுவரொட்டிகளை அகற்றியதாக கூறப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸை சிதைப்பது கேரள காங்கிரஸ் தொண்டர்களின் கேவலமான செயல் என்று கூறி பாஜக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. வந்தே பாரத் ரயிலில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..அவரே வந்துட்டாரா.! கிறிஸ்துவ சமூக ஓட்டு இனி பாஜகவுக்கு தான்.. கேரளா விசிட்டில் சிக்சர் அடித்த மோடி!!
இதையும் படிங்க..அதிகளவில் நன்கொடை பெற்ற பி.ஆர்.எஸ் கட்சி.. திமுக & அதிமுகவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?