DRDO CEPTAM தேர்வு முடிவுகள் வெளியானது.. தெரிந்து கொள்வது எப்படி? முழு விபரம்
டிஆர்டிஓ DRDO CEPTAM 10 A மற்றும் A தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
டிஆர்டிஓ எனப்படும் டிஃபென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் தற்போது DRDO CEPTAM 10 A மற்றும் A தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. DRDO CEPTAM 10 A&A CBT அடுக்கு 1 தேர்வுக்கான முடிவுகளை DRDO அறிவித்துள்ளது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான drdo.gov.in மூலம் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வு கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. முதல் அடுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் இப்போது அடுக்கு 2 தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வு செயல்முறை இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது. அடுக்கு-I (CBT) மற்றும் அடுக்கு-II (திறன்/உடல் தகுதி மற்றும் திறன் தேர்வு, பொருந்தக்கூடிய இடங்களில்) ஆகும்.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி? :
1.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
2.கேரியர்ஸ் என்பதை க்ளிக் செய்யவும்.
3.'CEPTAM-10/A&A' என்பதைக் கிளிக் செய்யவும்.
4.அடுக்கு-I முடிவு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
5.பதவியைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்
6.DRDO CEPTAM A&A முடிவுகள் திரையில் தோன்றும்
7.எதிர்கால தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
DRDO CEPTAM A&A முடிவு 2023 ஜூனியர் மொழிபெயர்ப்பாளர், ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர், ஸ்டோர் அசிஸ்டென்ட், செக்யூரிட்டி அசிஸ்டென்ட், வாகன ஆபரேட்டர், ஃபயர் என்ஜின் டிரைவர் மற்றும் ஃபயர்மேன் போன்ற பல்வேறு பதவிகளின் கீழ் ஆட்சேர்ப்புக்கானது ஆகும்.
DRDO CEPTAM 10 A&A முடிவு 2023க்கான நேரடி இணைப்பு:
https://drdo.res.in:8888/WebAppAA/Tier-I_result/
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் முடிவுகளை சரிபார்க்க வேண்டும், ஏனெனில் அது தபால் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படாது.
இதையும் படிங்க: B.E படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை..! இவ்வளவு ஊதியமா?...மிஸ் பண்ணிடாதீங்க..!