இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, கொரோனா தொற்று, முதல்வர் ஸ்டாலின், அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

01:34 PM (IST) May 21
ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்த்தி தரப்பில் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11:00 PM (IST) May 20
ஐபிஎல் 2025 பிளேஆஃப் போட்டிகளுக்கான இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் இறுதிப் போட்டியை நடத்தும். வானிலை காரணமாக கொல்கத்தா இறுதிப் போட்டிக்கான இடமாக கைவிடப்பட்டது.
10:42 PM (IST) May 20
இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 24.05.2025. மத்திய அரசு வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
10:33 PM (IST) May 20
தோல்வியிலிருந்து வெற்றிக்கு மாறும் எளிய தினசரிப் பழக்கங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, உறுதியான மனநிலையை உருவாக்குங்கள்
10:32 PM (IST) May 20
10:19 PM (IST) May 20
சிஐஎஸ்எஃப்-பில் 403 ஹெட் கான்ஸ்டபிள் வேலைகள்
10:10 PM (IST) May 20
வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! தேசிய அனல் மின் கழகம் (NTPC) Assistant Chemist Trainee (உதவி ரசாயன ஆய்வாளர் பயிற்சி) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10:06 PM (IST) May 20
டாஸ்மாக் கடைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் மே 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
09:59 PM (IST) May 20
சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 6,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையாகும்.
09:47 PM (IST) May 20
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு எங்கு மேற்கொள்ளப்படுகிறது? முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
09:25 PM (IST) May 20
ஏர்டெல் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச கூகிள் ஒன் கிளவுட் சந்தாவை வழங்குகிறது! உங்கள் திட்டத்துடன் கூடுதல் கிளவுட் சேமிப்பகம் மற்றும் கூகிள் நன்மைகளை அனுபவிக்கவும்.
09:10 PM (IST) May 20
ஓசோன் படலம் குணமடையும் போது, நம் தென் பெருங்கடல் மீண்டும் கார்பனை உறிஞ்சும் திறனைப் பெறலாம் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. ஆனால் ஒரு பெரிய "ஆனால்" இருக்கிறது!
08:37 PM (IST) May 20
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
08:35 PM (IST) May 20
டைம் பத்திரிகையின் 2025ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 நன்கொடையாளர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, நிகில் காமத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
07:58 PM (IST) May 20
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ்ஐ, சமூக ஊடகங்கள், ஹனி டிராப் மூலம் இந்தியாவில் உளவு பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
07:26 PM (IST) May 20
உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைக்கும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி, ஜாக்கிங், வாக்கிங், உடற்பயிற்சி என எதுவும் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே ஈஸியாக உடம்பை குறைக்க ஏதாவது வழி இருக்கா என்பது தான். நிச்சயமாக உள்ளது. இந்த டிப்சை போதும்.
07:03 PM (IST) May 20
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளனர்.
06:56 PM (IST) May 20
சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், சிலவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது அடிக்கும் வெயிலில் அவர்கள் மோர் குடிக்கலாமா? அப்படி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என தெரிந்து கொள்ளலாம்.
06:42 PM (IST) May 20
அசைவ உணவுகளில் முட்டை உணவுகளுக்கு தனி fanbase உண்டு. அசைவம்-சைவம் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களின் நாக்கின் சுவையை கட்டி இழுக்கும் சுவையான, காரசாரமான முட்டை கிரேவியை வீட்டில் ஈஸியா செய்யலாம். இதன் சுவையை மறக்கவே முடியாது.
06:17 PM (IST) May 20
டிரம்ப் புடினுடன் பேசியதை அடுத்து, உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. டிரம்ப், புடின் கண்ணியமானவர் என்றும், நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
06:16 PM (IST) May 20
கேரளாவில் செய்யப்படும் அசைவ உணவுகளுக்கு எப்போதும் தனி சுவை உண்டு. இதில் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்யும் சிக்கன் கறி அல்டிமேட்டாக இருக்கும். தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா என அனைத்து வகையான உணவிற்கும் செமையாக பொருந்தக் கூடியதாக இருக்கும்.
06:02 PM (IST) May 20
கடைகளில் கரும்புச்சாறு வாங்கும் போது அதில் இஞ்சிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தான் கொடுப்பார்கள். இப்படி வாங்கப்படும் கரும்புச்சாறினை உடனடியாக குடித்து விட வேண்டும் என்பார்கள். இதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியாது என்றால் பதில் இதோ.
05:50 PM (IST) May 20
நம்முடைய உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் முக்கியமான 7 அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால் கண்டிப்பாக ஒரு போதும் அலட்சியம் செய்து விடாமல் மிக கவனமாக இருக்க வேண்டும். உடனடியாக டாக்கரை அணுக வேண்டும்.
05:33 PM (IST) May 20
மும்பைக்கு முதல் முறையாக வருகை தந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி கவாய், நீதித்துறைக்கு மரியாதை அளிக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
05:25 PM (IST) May 20
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கண்டிப்பாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சில உணவை தவிர்ப்பதுடன், சில பொருட்களுடன் சேர்த்து கண்டிப்பாக சாப்பிடவே கூடாது. இதுவும் எடையை அதிகரிக்க வைக்கும்.
04:44 PM (IST) May 20
மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். அதற்கு பதிலாக இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ உள்பட 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
04:43 PM (IST) May 20
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
04:15 PM (IST) May 20
சட்டவிரோத குடியேற்றத்தை எளிதாக்குவதாகக் கூறி, இந்தியப் பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
04:12 PM (IST) May 20
04:05 PM (IST) May 20
04:01 PM (IST) May 20
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா 7,154 யூனிட்கள் விற்பனையாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. 27.97 kmpl மைலேஜ் மற்றும் 45 லிட்டர் டேங்க்கினால் 1200 கிமீ வரை பயணிக்கலாம்.
03:50 PM (IST) May 20
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா அளவில் கலக்கி வரும் இயக்குனர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
03:50 PM (IST) May 20
03:39 PM (IST) May 20
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் GTI மே 26 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 2.0L GTI பெட்ரோல் எஞ்சின், 7-ஸ்பீட் டூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பல அம்சங்களுடன் இந்த கார் வருகிறது.
03:38 PM (IST) May 20
கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் முன்பு அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என இந்தப் பதிவில் காணலாம்.
03:38 PM (IST) May 20
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் ஆதரவின்றி திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
03:33 PM (IST) May 20
செங்கல்பட்டில் மணல் லாரி திருடப்பட்டு, போக்குவரத்து காவலர் 10 கி.மீ தொங்கியபடி சென்று மடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03:27 PM (IST) May 20
சேலம் மாணவர் கவுதம் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்டார். நீட் ரத்து வாக்குறுதி பொய் எனக் குற்றஞ்சாட்டி, ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி என வலியுறுத்தினார்.
03:16 PM (IST) May 20
நடிகர் ரவி மோகன் தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
03:08 PM (IST) May 20
‘தக் ஃலைப்’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமலஹாசன் கறி மீன் பொளிச்சது குறித்து பேசியிருந்தார். தற்போது இது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் மீன் பொளிச்சது எவ்வாறு செய்ய வேண்டும் என தேடத் துவங்கியுள்ளனர்.