MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 8th, 10th, 12th, Degree, ITI படித்தவர்களுக்கு இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள்

8th, 10th, 12th, Degree, ITI படித்தவர்களுக்கு இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள்

இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 24.05.2025. மத்திய அரசு வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

2 Min read
Suresh Manthiram
Published : May 20 2025, 10:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள்!
Image Credit : Getty

இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300+ வேலைவாய்ப்புகள்!

இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் (Dairy Development Corporation Of India Limited - DDCIL), இந்திய அளவில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 6300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை இங்கே காணலாம்.

25
பல்வேறு பதவிகள், அள்ளித்தரும் சம்பளம்!
Image Credit : Freepik@iljaest

பல்வேறு பதவிகள், அள்ளித்தரும் சம்பளம்!

DDCIL ஆனது Project Manager, Regional Manager, Marketing Manager, Executive Manager, Divisional Manager, District Manager, Tehsil Manager, Sales Manager, Assistant Sales Manager, Accountant, Clerk, Computer Operator, Milk Center Manager, Field Officer, Trainee Officer, Apprentice, Store Supervisor, Lab Attendant, Helper, Driver, Peon, Guard, Multi-Tasking Staff மற்றும் Electrician என பலதரப்பட்ட பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. இந்தப் பதவிகளுக்கு மாத சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,15,900 வரை வழங்கப்பட உள்ளது.

Related Articles

Related image1
அதிக சம்பாதிக்க ஆசையா? டாப் 8 வேலைவாய்ப்புகள் இதோ!
Related image2
டிகிரிகூட தேவையில்ல... கைநிறைய சம்பளத்துடன் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!
35
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
Image Credit : google

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இந்த வேலைவாய்ப்புகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு என பலவிதமான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பதவிகளுக்கு 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் உரிய விரிவான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்ளவும்.

45
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
Image Credit : our own

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

விண்ணப்பக் கட்டணமாக SC/ST, OBC, EWS பிரிவினருக்கு ரூ.390/-ம், மற்ற பிரிவினருக்கு ரூ.675/-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Computer Based Test) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

55
முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
Image Credit : our own

முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி 25.04.2025 ஆகும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 24.05.2025. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் DDCIL-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://ddcil.org.in/](https://ddcil.org.in/) வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த அரிய மத்திய அரசு வேலைவாய்ப்பை தவறவிடாமல், உடனடியாக விண்ணப்பித்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுங்கள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
ஆட்சேர்ப்பு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved