MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 2273 காலியிடங்கள்.. வங்கி வேலை விரும்புவோருக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே அப்ளை செய்யுங்க

2273 காலியிடங்கள்.. வங்கி வேலை விரும்புவோருக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே அப்ளை செய்யுங்க

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 2,273 சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (CBO) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நடத்தப்படும். இதற்கான முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 20 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எஸ்பிஐ வங்கியில் வேலை
Image Credit : Google

எஸ்பிஐ வங்கியில் வேலை

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 2,273 ‘சர்க்கிள் பேஸ்டு ஆபிசர்’ (CBO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் பிப்ரவரி 18 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு 25 பிப்ரவரி 2026 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

25
2273 காலிப்பணியிடங்கள்
Image Credit : Getty

2273 காலிப்பணியிடங்கள்

இதன் மூலம் நாடு முழுவதும் 16 சர்க்கிள்களில் மொத்தம் 2,273 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,050 இடங்கள் வழக்கமான காலிப்பணியிடங்களாகவும், 223 இடங்கள் முந்தைய ஆண்டுகளின் பின்வாங்கிய (பேக்லாக்) பணியிடங்களாகவும் உள்ளன. மகாராஷ்டிரா சர்க்கிளில் 194 காலிப்பணியிடங்களும், மும்பை மெட்ரோ சர்க்கிளில் 143 இடங்களும் உள்ளன. அதனைத் தொடர்ந்து அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் கனிசமான பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
குறைந்த சம்பளத்தில் கூட டாடா பஞ்ச் காரை வாங்கலாம்.. மாத EMI இவ்வளவு தான்.. முழு விபரம்
Related image2
கொங்குநாட்டுக்கு பெரிய சர்ப்ரைஸ்.. சேலம்–செங்கப்பள்ளி சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம்.. மெகா அப்டேட்
35
கல்வித்தகுதி விவரங்கள்
Image Credit : Getty

கல்வித்தகுதி விவரங்கள்

தகுதிகள் குறித்து பார்க்கும்போது, ​​அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், பொறியியல், சிஏ போன்ற தொழில்முறை பட்டதாரிகளும் தகுதியுடையவர்கள். 31 டிசம்பர் 2025 நிலவரப்படி, வணிக வங்கி அல்லது பிராந்திய கிராம வங்கியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் அவசியம். வயது வரம்பு 21 முதல் 30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு தளர்வு வழங்கப்படும்.

45
எழுத்துத் தேர்வு முதல் இன்டர்வியூ வரை
Image Credit : Getty

எழுத்துத் தேர்வு முதல் இன்டர்வியூ வரை

விண்ணப்பிக்கும் சர்க்கிளின் உள்ளூர் மொழி அறிவு கட்டாயம். தேர்வு நடைமுறை நான்கு கட்டங்களாக நடைபெறும். முதலில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு (விடை தேர்வு மற்றும் விளக்கத் தேர்வு) மார்ச் 2026ல் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழி திறன் பரிசோதனை நடைபெறும்.

55
வங்கி அதிகாரி வேலை
Image Credit : Getty

வங்கி அதிகாரி வேலை

ஆர்வமுள்ளவர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக 25 பிப்ரவரி 2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. அரசு வங்கியில் நிலையான பணியை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு எனலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
பாரத ஸ்டேட் வங்கி
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
2026-ல் இந்த வேலைகளுக்குத் தான் செம டிமாண்ட்! இந்தியாவில் அதிக சம்பளம் அள்ளிக் கொடுக்கும் டாப் பதவிகள் எவை?
Recommended image2
இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்! இனி Photoshop, Firefly உள்ளிட்ட Adobe-ன் 3 AI சாஃப்ட்வேர்களும் முற்றிலும் இலவசம்!
Recommended image3
CBSE 10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: முக்கிய பாடங்கள், இலக்கணம் மற்றும் அதிக மதிப்பெண் பெற டிப்ஸ்!
Related Stories
Recommended image1
குறைந்த சம்பளத்தில் கூட டாடா பஞ்ச் காரை வாங்கலாம்.. மாத EMI இவ்வளவு தான்.. முழு விபரம்
Recommended image2
கொங்குநாட்டுக்கு பெரிய சர்ப்ரைஸ்.. சேலம்–செங்கப்பள்ளி சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றம்.. மெகா அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved