- Home
- Sports
- Sports Cricket
- மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 முக்கிய வீரர்கள் விலகல்! அதிரடி வீரர் உள்பட 3 பேர் சேர்ப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 முக்கிய வீரர்கள் விலகல்! அதிரடி வீரர் உள்பட 3 பேர் சேர்ப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். அதற்கு பதிலாக இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ உள்பட 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Mumbai Indians Added 3 Key Players
மும்பை இந்தியன்ஸ் அணி, வில் ஜாக்ஸ், கார்பின் போஷ் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ, இலங்கை கேப்டன் சரித் அசலங்கா மற்றும் இங்கிலாந்து பாஸ்ட் பவுலர் ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. வில் ஜாக்ஸ், கார்பின் போஷ் மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் தங்கள் நாட்டு அணிக்காக விளையாட தாயகம் திரும்புகின்றனர்.
3 முக்கிய வீரர்களை தவற விடும் மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி இரண்டு லீக் போட்டிகளுக்கு முன்னதாக வில் ஜாக்ஸ் இந்தியா திரும்பியிருந்தார்.ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடுவதால் வில் ஜாக்ஸ், கார்பின் போஷ் ஆகியோர் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகளை தவற விடுகின்றனர்.
தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோத உள்ளதால் தென்னாப்பிரிக்கா வீரர் ரியான் ரிக்கல்டனும் ஐபிஎல் பிளே ஆப் விளையாட முடியாது.
ஜானி பேர்ஸ்டோ மும்பை அணியில் சேர்ப்பு
மும்பை இந்தியன்ஸ் அணி இப்போது எடுத்துள்ள ஜானி பேர்ஸ்டோ 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 287 போட்டிகளில் பேர்ஸ்டோ விளையாடியுள்ளார்.
ஐந்து சீசன்களில் 50 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் (2022 மற்றும் 2024) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2019-21) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சரித் அசலங்கா, ரிச்சர்ட் க்ளீசன்
ஐபிஎல்லில் 34.54 சராசரியில், 144.45 ஸ்ட்ரைக் ரேட்டில் 1589 ரன்கள் அடித்துள்ளார். இரண்டு சதங்களையும் அடித்துள்ளார். சரித் அசலங்காவை பொறுத்தவரை தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இலங்கையின் கேப்டனாக உள்ளார். இவர் 58 போட்டிகளில் 24.45 சராசரி மற்றும் 128.55 ஸ்ட்ரைக் உடன் 1247 ரன்கள் எடுத்துள்ளார்.
37 வயதான ரிச்சர்ட் க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக ஆறு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார், மேலும் டெத் ஓவர்களில் தனது திறமைக்கு பெயர் பெற்றவர். கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா?
மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.