மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு! இளம் ஸ்பின் பவுலர் திடீர் விலகல்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார்.

Vignesh Puthur ruled out IPL: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 5 முறை கோப்பையை கையில் ஏந்தியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 4ல் தோல்வி அடைந்து 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் தொடர் தோல்வியை சந்தித்து இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இப்போது தொடர் வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.
Vignesh Puthur, Mumbai Indians
விக்னேஷ் புத்தூர் விலகல்
மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். மும்பை அணி நிர்வாகம் காயமடைந்த விக்னேஷ் புத்தூருக்கு மாற்றாக ரகு சர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி லெக் ஸ்பின்னர் ரகு சர்மாவை ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் அணியில் சேர்த்துள்ளது.
ரகு சர்மா அணியில் சேர்ப்பு
பஞ்சாப்பின் ஜலந்தரைச் சேர்ந்த 31 வயதான வலது கை லெக் பிரேக் பந்து வீச்சாளர் ரகு சர்மா, பஞ்சாப் மற்றும் புதுச்சேரிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இவர் ஒரு அற்புதமான முதல் தர சாதனையைப் படைத்துள்ளார், 11 போட்டிகளில் சராசரியாக 19.59 இல் 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் 7/56 சிறந்த புள்ளிவிவரங்கள் அடங்கும். 9 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் இருந்து 14 விக்கெட்டுகளையும், பல டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Vignesh Puthur, IPL
மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு
ஐபிஎல்லில் ரகு சர்மாவின் முதல் போட்டி இதுவாகும். அவர் RAPP பட்டியலில் இருந்து ரூ.30 லட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார். சிறந்த இளம் ஸ்பின்னரான விக்னேஷ் புத்தூரின் விலகல் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாகும். மார்ச் மாதம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான மும்பையின் சீசன் தொடக்க ஆட்டத்தில் விக்னேஷ் புத்தூர் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி இருந்த விக்னேஷ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அணியுடன் தொடர்ந்து இணைந்திருப்பார்
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது காயம் காரணமாக விலகியுள்ளார். ஐபிஎல்லில் இருந்து விலகி இருந்தாலும் விக்னேஷ் புத்தூர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து இணைந்திருப்பார். 22 வயதான அவர் காயத்தில் இருந்து குணமடைய மும்பை இந்தியன்ஸ் அணி முழு ஆதரவை வழங்க உள்ளது.
Mumbai Indians, Cricket
மும்பை அணியின் எழுச்சி
ஐந்து முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற பிறகு, தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் சீசனை மாற்றியுள்ளது. வரலாற்று ரீதியாக, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முறை வேகத்தைக் கண்டறிந்தால் அந்த தொடரில் கோப்பையை வெல்லும். ஒரு சீசனில் தொடர்ச்சியாக ஐந்து அல்லது நான்கு போட்டிகளில் வென்றபொதெல்லாம் மும்பை அணி கோப்பையை கைப்பறியுள்ளது குறிப்பிடத்தக்கது.