இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், , தமிழ்நாடு, வானிலை நிலவரம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:54 PM (IST) May 13
2020ல் பிறந்த குழந்தைகள் புவி வெப்பமயமாதலால் 4 மடங்கு அதிக தீவிர வானிலையை எதிர்கொள்வார்கள் என்று ஆய்வு காட்டுகிறது. ஏழ்மையான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். உடனே செயல்படுங்கள்!
11:39 PM (IST) May 13
கூகுள் நிறுவனம் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு தனது 'G' லோகோவை மென்மையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது, ஜெமினி AI பிராண்டிங்கைப் போன்ற பாயும் பல வண்ண சாய்வைக் கொண்டுள்ளது.
11:24 PM (IST) May 13
சீனாவின் பைடு நிறுவனம் விலங்குகளின் ஒலிகளையும் நடத்தைகளையும் மனித மொழியில் மொழிபெயர்க்கும் AI அமைப்பை உருவாக்குகிறது. உங்கள் செல்லப்பிராணிகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!
11:11 PM (IST) May 13
கனரா பேங்க் செக்யூரிட்டீஸ் லிமிடெட் டெபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் ரிலேஷன்ஷிப் மேனேஜர் (பயிற்சி) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது.
11:01 PM (IST) May 13
செவ்வாய்க்கிழமை மாலை ஏர்டெல் நெட்வொர்க் சேவையில் இடையூறு ஏற்பட்டதால், சென்னை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பயனர்கள் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மெதுவான மொபைல் டேட்டா, அழைப்புகள் துண்டிக்கப்படுவது போன்ற புகார்கள் பதிவாகியுள்ளன.
11:00 PM (IST) May 13
அண்ணா பல்கலைக்கழகம் ஜூலையில் அரியர் தேர்வுக்கு இறுதி வாய்ப்பு வழங்குகிறது. ஆன்லைன் பதிவு மே 17 உடன் முடிகிறது. இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
10:44 PM (IST) May 13
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு 2025 அட்டவணை ஜூலை நடுப்பகுதியில் வெளியாகும். cbse.gov.in இல் பார்க்கவும். சிறப்பாக முயற்சி செய்யுங்கள்!
10:26 PM (IST) May 13
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்களா? திறன் சார்ந்த படிப்புகள், ஐடிஐ, திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல வாய்ப்புகள் உள்ளன. நம்பிக்கையை இழக்காதீர்கள்!
10:13 PM (IST) May 13
UPSC சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு 2025 நுழைவுச்சீட்டு upsconline.gov.in இல் மே 25, மாலை 4 மணிக்குள் பதிவிறக்கம் செய்யுங்கள்.
10:08 PM (IST) May 13
09:20 PM (IST) May 13
08:37 PM (IST) May 13
08:18 PM (IST) May 13
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேசப்படும் பிரஹுய் மொழி, தென்னிந்திய மொழிகளுடன் தொடர்புடையது. சேவா வம்சம் போன்ற தென்னிந்திய இந்து ஆட்சியாளர்கள் பலுசிஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்ததற்கான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.
07:57 PM (IST) May 13
06:47 PM (IST) May 13
06:44 PM (IST) May 13
06:43 PM (IST) May 13
இரவில் சில உணவுகள், சில பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். பலருக்கும் சாப்பிட்ட பிறகு வாழைப்பழங்கள் சாப்பிடும் பழக்கம் உண்டு. இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
06:24 PM (IST) May 13
நம்ம ஊர் தேங்காய் சாதம் வழக்கமாக சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரளாவில் எப்படி தேங்காய் சாதம் செய்வார்கள் என சாப்பிட்டு பார்த்திருக்கீங்களா? தேங்காய் மணம் கமகமக்க வித்தியாசமாக செய்வார்கள். இதை எப்படி செய்து அசத்துவது என வாங்க தெரிந்து கொள்ளலாம்.
06:14 PM (IST) May 13
மெட் காலா 2025 ஆடை கண்காட்சி நிகழ்ச்சியில் மோனா படேல் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக ஒரு ரோபோ நாயுடன்.
06:03 PM (IST) May 13
கோடை காலத்தில் மாம்பழம் ஈஸியாக கிடைக்கும். நிறைய மாம்பழம் வாங்கினால் வீணாகி விடும் என நினைக்க வேண்டும். அவற்றை வீணாக்காமல், சுவையான மற்றும் ஆரோக்கியமான ஃப்ரூட்டியை வீட்டிலேயே செய்து வெயிலுக்கு இதமாக ஜில்லென குடிக்கலாம்.
05:48 PM (IST) May 13
பெண்கள் அனைவருமே அதிகம் கவனம் செலுத்துவது முக அழகு மற்றும் கூந்தல் அழகாக இருக்க வேண்டும் என்பது தான். பெண்கள் தங்களது சருமத்தையும் கூந்தலையும் கவனித்துக்கொள்வதற்கு மிக எளிமையாக செய்யக் கூடிய இந்த ஜூஸ் உடலுக்கு அளவில்லாத நன்மைகளையும் தரக் கூடியதாகும்.
05:28 PM (IST) May 13
05:27 PM (IST) May 13
குழந்தைகள், வயதானவர்கள் மட்டுமல்ல அனைத்து வயதினருமே, ஆரோக்கியமான உணவு பகல் நேரத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இரவு நேரத்திற்கும் முக்கியம். இரவில், தூங்க செல்வதற்கு முன் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
05:06 PM (IST) May 13
சென்னை ஓசோன் டெக்னோ பூங்காவில் 630,000 சதுர அடிக்கு 10 ஆண்டு குத்தகைக்கு டிசிஎஸ் நிறுவனம் மாதந்தோறும் ரூ.2.8 கோடிக்கு கையெழுத்திட்டுள்ளது. வாடகை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் 12% அதிகரிக்கும்.
05:06 PM (IST) May 13
04:59 PM (IST) May 13
வேலை, வேலை என ஓடிக் கொண்டே இருப்பதால் பலரும் தங்களுக்காக நேரம் ஒதுக்கி டயட், உடற்பயிற்சி என எதுவும் செய்து கொள்வதில்லை. குறிப்பாக பெண்கள், இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில குறிப்பிட்ட பழக்கங்களை தினசரி கடைபிடித்து வந்தாலே போதும்.
04:58 PM (IST) May 13
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சம் இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சூதாட்டத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
04:50 PM (IST) May 13
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF) திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.80,000க்கும் மேல் வரி இல்லாத வருமானம் பெறலாம். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து, 15 ஆண்டுகள் லாக்-இன் காலத்திற்குப் பிறகு இந்த வருமானத்தைப் பெறலாம்.
04:31 PM (IST) May 13
தென்மேற்கு பருவமழை இன்று தெற்கு வங்கக்கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தொடங்கியது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
04:28 PM (IST) May 13
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை குறைக்க பலரும் படாதபாடு படுகிறார்கள். ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில விஷயங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிபி எனப்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை ஈஸியாக குறைக்க முடியும்.
04:27 PM (IST) May 13
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
04:08 PM (IST) May 13
ஐரோப்பாவில் 2043ல் முஸ்லீம் ஆட்சி மலரும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
04:08 PM (IST) May 13
03:40 PM (IST) May 13
பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
03:38 PM (IST) May 13
சென்னை வடபழனியில் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் பிரேம் ஆனந்த் வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 19 வயது இளைஞர் மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
03:37 PM (IST) May 13
03:36 PM (IST) May 13
03:18 PM (IST) May 13
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்ட ஒரே கையெழுத்தால் இந்தியாவில் மருந்துகளின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.
03:16 PM (IST) May 13
02:57 PM (IST) May 13
சென்னை-பாலக்காடு விரைவு ரயிலில் பயணித்த பெண் மீது மிடில் பெர்த் விழுந்து விபத்து. ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி விளக்கம் அளித்துள்ளது.